👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 040 கல்வி 📖 (Kalvi)
📖 (குறள் – 0391) 📖
📖 கற்க கசடறக் கற்பவை கற்றபின்
📖 நிற்க அதற்குத் தக.
🌻 படிக்க வேண்டும் பழுது இல்லாமல் படித்த பின்
🌻 படித்ததற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்.
📖 (குறள் – 0392) 📖
📖 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
📖 கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
🌻 எண் எனப்படுவதும் மற்றும் எழுத்து எனப்படுவதுமாகிய இந்த இரண்டும்
🌻 கண்களைப் போன்றது அறிவுடன் வாழும் உயிர்களுக்கு.
📖 (குறள் – 0393) 📖
📖 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
📖 புண்ணுடையர் கல்லா தவர்.
🌻 கண் உள்ளவர்கள் என்றால் கற்றவர்கள் முகத்தில்
🌻 புண் உள்ளவர்கள் கல்லாதவர்கள்.
📖 (குறள் – 0394) 📖
📖 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
📖 அனைத்தே புலவர் தொழில்.
🌻 விருப்பமுடன் ஒன்றாக கூடி உள்ளத்தால் பிரிந்து இருத்தல்
🌻 எல்லாம் புலவர்கள் தொழில்.
📖 (குறள் – 0395) 📖
📖 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
📖 கடையரே கல்லா தவர்.
🌻 உள்ளவர் முன் இல்லாதவர் நிலைப் போலவே எவ்வளவு கற்றிருந்தாலும் மேலும் கற்றுக்கொள்பவரே
🌻 கற்றவர் அவ்வாறு செய்யாதவரே கல்லாதவர்.
📖 (குறள் – 0396) 📖
📖 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
📖 கற்றனைத் தூறும் அறிவு.
🌻 தோண்டும் அளவிற்கு நீர் பெருகும் மணல் பாங்கான கிணற்றில் அதுபோலவே மனிதர்களுக்கு
🌻 கற்கின்ற அளவிற்கு பெருகும் அறிவு.
📖 (குறள் – 0397) 📖
📖 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
📖 சாந்துணையுங் கல்லாத வாறு.
🌻 எந்த ஒன்றையும் நாடி அணுகாமல் உணராமல் எவன் ஒருவன்
🌻 சிறிதளவும் கற்காமல் இருப்பது?
📖 (குறள் – 0398) 📖
📖 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
📖 எழுமையும் ஏமாப் புடைத்து.
🌻 தனிமையிலும் தான் கற்ற கல்வி ஒருவாருக்கு
🌻 உயர்ச்சியிலும் சிறந்ததாக மாறும்.
📖 (குறள் – 0399) 📖
📖 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
📖 காமுறுவர் கற்றறிந் தார்.
🌻 தான் இன்பம் அடைந்ததுப் போலவே உலகில் கண்டு மேலும் கற்க
🌻 ஆசைக் கொள்வார் கற்று அறிந்தவர்.
📖 (குறள் – 0400) 📖
📖 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
📖 மாடல்ல மற்றை யவை.
🌻 கேட்டை விளைவிக்காத விரும்பும் செல்வம் கல்வி அது ஒருவருக்கு
🌻 பணத்தைப் போன்றது அல்லாமல் வேறொன்று இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(040 – கல்வி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 கல்வி கசடு என்ற கருத்து பேதத்தை உருவாக்கும் என்பதால் கசடற கற்பது அவசியம்.
🌻 எண்ணும் எழுத்துமான கல்வியே உலகை உணர்த்தும் கண்கள்.
🌻 கற்காமல் யாரும் இருக்க முடியாது கல்வியின் பொருட்டு இன்பம் அடைந்தவர் அடுத்தவரும் இதை அடைய ஆசைபாடுவார்.
🌻 கேடு விளைவிக்காத கல்வியே சிறந்த செல்வமாகும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈