👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 039 இறைமாட்சி 📖 (Iraimatchi)
📖 (குறள் – 0381) 📖
📖 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
📖 உடையான் அரசருள் ஏறு.
🌻 போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும்
🌻 பெற்றவரே அரசருள் சிறந்தவர்.
📖 (குறள் – 0382) 📖
📖 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
📖 எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
🌻 அச்சம் கொல்லாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், ஆர்வமுடன் செயல்படுதல் ஆகிய நான்கும்
🌻 குறைவின்றி இருப்பதே அரசருக்கு இயல்பு.
📖 (குறள் – 0383) 📖
📖 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
📖 நீங்கா நிலனான் பவர்க்கு.
🌻 சோர்வு இல்லாது இருத்தல், கல்வி, துணிவுடன் செயல்படுதல் ஆகிய மூன்றும்
🌻 நீங்காமல் இருக்க வேண்டும் நலத்தை ஆள்பவருக்கு.
📖 (குறள் – 0384) 📖
📖 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
📖 மானம் உடைய தரசு.
🌻 அறத்திற்கு இழுக்கு இல்லாமல் அல்லாதவற்றை விளக்கி வீரத்திற்கு இழக்கு இல்லாமல்
🌻 மானத்தோடு இருப்பதே அரசு.
📖 (குறள் – 0385) 📖
📖 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
📖 வகுத்தலும் வல்ல தரசு.
🌻 எது எப்படி அமையவேண்டும் என்று இயற்றுவதும் அதற்கான பொருளை ஈட்டுவதும் அதை காப்பதும்
🌻 மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பதும் சிறப்பாக செய்வது அரசு.
📖 (குறள் – 0386) 📖
📖 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
📖 மீக்கூறும் மன்னன் நிலம்.
🌻 பார்க்க எளிமையாய் எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் தவிர்த்தவராய் இருக்கும்
🌻 மன்னனின் ஆட்சி எல்லை விரிவடையும்.
📖 (குறள் – 0387) 📖
📖 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
📖 தான்கண் டனைத்திவ் வுலகு.
🌻 இனிமையான வார்த்தைகளுடன் உதவ வல்லமை படைத்தவருக்கு
🌻 தனது வார்த்தைகள் படியே அமையும் உலகு.
📖 (குறள் – 0388) 📖
📖 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
📖 இறையென்று வைக்கப் படும்.
🌻 இது இப்படி இருக்க வேண்டும் என்று முறை செய்து அதை காப்பாற்றும் மன்னவன் மனிதர்களுக்கு
🌻இறையாக வைக்கப்படும்.
📖 (குறள் – 0389) 📖
📖 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
📖 கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
🌻 காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின்
🌻 ஆளுமையின் கிழ் தங்கும் உலகு.
📖 (குறள் – 0390) 📖
📖 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
📖 உடையானாம் வேந்தர்க் கொளி.
🌻 தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் – விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தால், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும்
🌻 உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(039 – இறைமாட்சி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தி இருக்க ஆறு அங்கங்கள் உடையதாக இருக்க வேண்டும்.
🌻 நன்கு திட்டம் செய்து யாவரும் நன்மை அடைய வழி அமைக்க செய்வதை இங்கே தெளிவு செய்கிறார் வள்ளுவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈