👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 064 அமைச்சு 📖 (Amaichu)
📖 (குறள் – 0631) 📖
📖 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
📖 அருவினையும் மாண்டது அமைச்சு.
🌻 தகுந்த கருவியும், உகந்த நேரமும், செய்ய வேண்டிய செயலும்,
🌻 செயல்பட வேண்டிய முறையும் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.
📖 (குறள் – 0632) 📖
📖 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
📖 ஐந்துடன் மாண்டது அமைச்சு.
🌻 அச்சமற்ற பார்வை, யாரும் சிறப்பாக இருக்க நினைத்து குடிகளை (குடும்ப நலம்) காத்தல், புதிய நிகழ்வுகளை கற்று அறிதல், நிர்வாகத்திறன், செயல்படுதல் என
🌻 ஐந்துடன் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.
📖 (குறள் – 0633) 📖
📖 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
📖 பொருத்தலும் வல்ல தமைச்சு.
🌻 தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்ப்பதும், பிரிந்துப் போனவர்களை
🌻 பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.
📖 (குறள் – 0634) 📖
📖 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
📖 சொல்லலும் வல்லது அமைச்சு.
🌻 அறிந்துக் கொள்வதில் அக்கரையும், தேவையானதை தேர்ந்து செயல்படுத்துவதும், தீர்க்கமாக ஒன்றை
🌻 சொல்லுவதும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.
📖 (குறள் – 0635) 📖
📖 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
📖 திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
🌻 நீதி மாறாது வாழும் நிலை அறிந்து, மேன்மையானவற்றை எடுத்துரைப்பவர் எப்பொழுதும்,
🌻 திறமைகளை அறிந்தவருக்கு மேலும் தேர்ச்சிப் பெற துணையாவார்.
📖 (குறள் – 0636) 📖
📖 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
📖 யாவுள முன்நிற் பவை.
🌻 நுட்பமான அறிவுடன், நூலின் அறிவும் உள்ளவருக்கு மேலான அறிவு
🌻 என்று எதுவும் முன் நிற்க முடியாது.
📖 (குறள் – 0637) 📖
📖 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
📖 இயற்கை அறிந்து செயல்.
🌻 செயல்படும் தன்மையை முழுமையாக வரைமுறை செய்து அறிந்திருந்தாலும்
🌻 இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும்.
📖 (குறள் – 0638) 📖
📖 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
📖 உழையிருந்தான் கூறல் கடன்.
🌻 அறிய வேண்டியதை அறிய முடியாதவனுக்கும் உறுதியுடன்
🌻 எடுத்துரைப்பது உடன் இருப்பவரின் கடமை.
📖 (குறள் – 0639) 📖
📖 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
📖 எழுபது கோடி உறும்.
🌻 மடத்தனமான ஆலோகர் அருகில் இருப்பது எதிரிகள்
🌻 எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.
📖 (குறள் – 0640) 📖
📖 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
📖 திறப்பாடு இலாஅ தவர்.
🌻 முறையான சுழ்நிலை அமைந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கமாட்டார்
🌻 திறமை இல்லாதவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(064 – அமைச்சு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 கருவி காலம் செய்யவேண்டியது செய்யவேண்டிய விதம் என தீர்மானிப்பதே அமைச்சு என்ற நிர்வாகம்.
🌻 நற்பண்புகளுடன் தேவையை அறிந்து அதை ஊக்கிவித்து தீமை அழித்து யாவரையும் காக்கும்படி இருக்க வேண்டும்.
🌻 முட்டாள்களின் ஆலோசனை அழிவைத்தரும் என உணர்ந்து முறையான முடிவை எடுக்கவேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈