👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 093 கள்ளுண்ணாமை 📖 (Kallunnamai)
📖 (குறள் – 921) 📖
📖 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
📖 கட்காதல் கொண்டொழுகு வார்.
🌻 பிறரால் நேசிக்கப் படமாட்டர், தனது சுய ஆற்றலையும் இழப்பார் எப்பொழதும்
🌻 கள் மீது ஆர்வம் கொண்டு வாழ்பவர்.
📖 (குறள் – 0922) 📖
📖 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
📖 எண்ணப் படவேண்டா தார்.
🌻 கள்ளை அருந்த வேண்டாம். அருந்தவேண்டுமானால் அருந்து எடுத்துக் காட்டாக இருப்பவன் என்று
🌻 நினைக்க வேண்டாம் என்றால்.
📖 (குறள் – 0923) 📖
📖 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
📖 சான்றோர் முகத்துக் களி.
🌻 ஈன்றவளே முகம் சுளிக்கும் துன்பம் தரும் கள்போதையை எப்படி
🌻 சான்றோர்கள் சகித்து முகம் மலர்கள்.
📖 (குறள் – 0924) 📖
📖 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
📖 பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
🌻 நாணம் என்ற நல்லவள் வெளியேறுவாள் கள்ளென்னும்
🌻 நன்மை தராத பெருங்குற்றம் செய்தால்.
📖 (குறள் – 0925) 📖
📖 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
📖 மெய்யறி யாமை கொளல்.
🌻 கை தவறி உடைத்தது போன்றே பொருள் கொடுத்து
🌻 தன்னை மறக்கப் போதைப் பொருள் உட்கொள்வது.
📖 (குறள் – 0926) 📖
📖 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
📖 நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
🌻 தூங்கியவர் மரணத்தவரில் இருந்து மாறுபட்டவர் இல்லை என்பதைப் போலவே
🌻 நஞ்சுண்பவர் கள்ளுண்பவரே.
📖 (குறள் – 0927) 📖
📖 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
📖 கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
🌻 அழிவைத் தருவதை தனக்கென எடுத்துக் கொள்பவரை உடன் இருக்கும் உள்ளூர் நபர்கள் எள்ளி நகைப்பர் என்பதைப் போன்றே
🌻 கள்ளுண்டு கண் மயங்குபவருக்கும் ஏற்படும்.
📖 (குறள் – 0928) 📖
📖 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
📖 ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
🌻 மது போதையை அறிந்தது இல்லை என்று சொல்வதை கைவிடுக, நெஞ்சத்தில்
🌻 மறைத்த மற்றதும் போதையால் வெளிப்படும்.
📖 (குறள் – 0929) 📖
📖 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
📖 குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
🌻 மது போதையில் களிப்பவரை காரணம் காட்டி மாற்ற முயல்வது நீருக்கு அடியில்
🌻 குளிப்பவருக்கு தீப்பந்தம் கொடுப்பதைப் போன்றது.
📖 (குறள் – 0930) 📖
📖 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
📖 உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
🌻 மது போதையில் இல்லாத பொழுது போதையில் களிப்பவரின்
🌻 கேவல செயலால் அடையும் சோர்வை எண்ணிப் பார்க்க வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(093 – கள்ளுண்ணாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 கள் மீது காதல் கொண்டவர் உறவை இழந்து சுய ஆற்றலையும் இழந்து முன் உதாரணமாக வாழும் சான்றோன் என்ற தகுதியையும் இழப்பார்.
🌻 நாணம் என்ற நற்பண்பு கெடுக்கும்.
🌻 கள் தன்னை மறக்கச் செய்யும்.
🌻 மதுக்கு அடிமையாக உள்ளவருக்கு போதிப்பது நீருக்குள் தீபந்தம் ஏற்றுவது போன்றது.
🌻 போதை இல்லாதபொழுது போதையுள்ளவர்களின் செயலைப் பார்த்து திருந்த வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (094-சூது) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈