👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 092 வரைவின் மகளிர் 📖 (Varaivin Magaler)
📖 (குறள் – 911) 📖
📖 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
📖 இன்சொல் இழுக்குத் தரும்.
🌻 அன்பினால் விரும்பி நாடமல் பொருளுக்காய் நாட்டம் கொள்ளும் ஆய்தொடியாரின் (விலைமாதரின்)
🌻 இனிய சொற்கள் இழிவைத்தரும்.
📖 (குறள் – 0912) 📖
📖 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
📖 நயன்தூக்கி நள்ளா விடல்.
🌻 பயனை அறிந்து அதற்கேற்றார் போல் பழகும் பண்புடைய பண்பில்லா பெண்களை
🌻 மேன்மை அறிந்து உறவாடமல் தவிர்க்க வேண்டும்.
📖 (குறள் – 0913) 📖
📖 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
📖 ஏதில் பிணந்தழீஇ அற்று.
🌻 பணத்தையே குறிக்கொளாக கொண்ட பெண்களிடம் பொய்யாக உறவுக் கொள்வது
🌻 எந்த உணர்வும் இல்லாத பிணத்தை தழுவுதல் போன்றது.
📖 (குறள் – 0914) 📖
📖 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
📖 ஆயும் அறிவி னவர்.
🌻 பொருளை மட்டுமே பொருளாக கொள்பவரின் புலன்களை விரும்பமட்டார்கள் அருளாள் வரும் பொருளை
🌻 தேர்ந்தெடுக்கும் அறிவுள்ளவர்கள்.
📖 (குறள் – 0915) 📖
📖 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
📖 மாண்ட அறிவி னவர்.
🌻 பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள் மனதின் நலத்தால்
🌻 நல்லறிவு பெற்றவர்கள்.
📖 (குறள் – 0916) 📖
📖 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
📖 புன்னலம் பாரிப்பார் தோள்.
🌻 தனது நலத்தை கவனித்து வாழ்பவர் நாடமாட்டார்கள் இடம் பார்த்து
🌻 புலன் நலத்தை பறிப்பவர் தோள்.
📖 (குறள் – 0917) 📖
📖 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
📖 பேணிப் புணர்பவர் தோள்.
🌻 நிறைவான மனம் இல்லாதவரே நாடுவார் அடுத்தவர் மனதை
🌻 கவனித்து புணர்பவர் தோள்.
📖 (குறள் – 0918) 📖
📖 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
📖 மாய மகளிர் முயக்கு.
🌻 சீர்தூக்கி ஆராயும் அறிவற்றவர்களே தெய்வீகம் என்பார்கள்
🌻 போலியான மகளிரின் உடல்உறவை.
📖 (குறள் – 0919) 📖
📖 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
📖 பூரியர்கள் ஆழும் அளறு.
🌻 வரைமுறை இல்லாத பட்டுப் போன்ற மகளிரின் மென்தோள் குற்றம் எது? என்று அறியாத
🌻 புரிதல் அற்றவர்கள் முழ்கும் நரகம்.
📖 (குறள் – 0920) 📖
📖 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
📖 திருநீக்கப் பட்டார் தொடர்பு.
🌻 இருமனம் என்ற அலைபாயும் மனம் கொண்ட பெண்கள், கள், சூதாட்டம் என அடிமைபட்ட
🌻 திரு நீக்கப்பட்டவர்கள் தொடர்புக் கொள்வர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(092 – வரைவின் மகளிர்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும்.
🌻 பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது.
🌻 நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை.
🌻 வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவற்றவர்கள் மூழ்கும் நரகம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈