👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 091 பெண்வழிச் சேரல் 📖 (Penvazli seral)
📖 (குறள் – 0901) 📖
📖 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
📖 வேண்டாப் பொருளும் அது.
🌻 தன் இல்லச் சிறப்பை மட்டும் கவனிப்பவர் நற்பயன் அடைய முடியாது. செயல்கள் அற்று சும்மா இருக்க நினைப்பவருக்கு
🌻 வேண்டாப் பொருள் அது.
📖 (குறள் – 0902) 📖
📖 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
📖 நாணாக நாணுத் தரும்.
🌻 ஆக்கபூர்வமான செயல்களை கவனிக்காமல் பெண்ணை மட்டுமே விரும்புபவன் .
🌻 வெட்கப்படக்கூடிய பெரிய வேட்கக் கேட்டை அடைவான்.
📖 (குறள் – 0903) 📖
📖 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
📖 நல்லாருள் நாணுத் தரும்..
🌻 இல்லத்தரசியிடம் பணிவு இயல்பாக இல்லை என்றால் எக்காலத்திலும்
🌻 நல்லவர்கள் முன் நாண வேண்டும்.
📖 (குறள் – 0904) 📖
📖 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
📖 வினையாண்மை வீறெய்த லின்று.
🌻 குடும்ப தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன்
🌻 செயல்திறன் சிறப்பாக இருக்காது.
📖 (குறள் – 0905) 📖
📖 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
📖 நல்லார்க்கு நல்ல செயல்.
🌻 மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி
🌻 நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.
📖 (குறள் – 0906) 📖
📖 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
📖 அமையார்தோள் அஞ்சு பவர்.
🌻 இமைக்காது இருக்கும் மனதிடம் உள்ளவராக வாழ்ந்தாலும் நற்கதியை அடையமுடியாது
🌻 நல்லபடியாக அமையாத மனைவிக்கு அஞ்சுபவர்.
📖 (குறள் – 0907) 📖
📖 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
📖 பெண்ணே பெருமை உடைத்து.
🌻 ஆண் என்ற தாகத்தால் பெண் ஏவிடும் வேலையைச் செய்பவரை காட்டிலும் நாணமுள்ள
🌻 பெண் பெருமைக்கு உரியவள்.
📖 (குறள் – 0908) 📖
📖 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
📖 பெட்டாங்கு ஒழுகு பவர்.
🌻 நண்பர்களுக்கு முழுமையாக இருக்கமாட்டார், நன்மையானதை செய்யமாட்டார் அழகான நெற்றி உடையவளின்
🌻 பொட்டு போல் ஒட்டிக் கொண்டவர்.
📖 (குறள் – 0909) 📖
📖 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
📖 பெண்ஏவல் செய்வார்கண் இல்.
🌻 தர்ம செயலும், நிறைந்த பொருளும், பிற நற்செயலும்
🌻 பெண்மைக்கு மயங்கி அடிமைச் செயல் செய்பவருக்கு இல்லை.
📖 (குறள் – 0910) 📖
📖 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
📖 பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
🌻 நல்லெண்ணமும் மன உறுதியும் கொண்டவர்கள் இடத்தில் எக்காலத்திலும்
🌻 பெண்மைக்கு அடி பணிந்தோம் என்ற அறியாமை இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(091 – பெண்வழிச் சேரல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மாண்பு மிகுந்தவராக முடியாது.
🌻 மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம்.
🌻 மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பேறு அடையமுடியாது.
🌻 பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார்.
🌻 பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈