👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 030 வாய்மை 📖 (Vaimai)
📖 (குறள் – 0291) 📖
📖 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
📖 தீமை இலாத சொலல்.
🌻 வாய்மை என்பது எது என்றால் எந்த ஒரு வகையிலும்
🌻 தவறு இல்லாமல் சொல்வது.
📖 (குறள் – 0292) 📖
📖 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
📖 நன்மை பயக்கும் எனின்.
🌻 பொய்மை வாய்மை போன்றதே குற்றம் தீர்த்து
🌻 நன்மை செய்யும் என்றால்.
📖 (குறள் – 0293) 📖
📖 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
📖 தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
🌻 தனது நெஞ்சம் அறிந்து பொய் சொல்லக்கூடாது பொய்யாக இருப்பின்
🌻 தனது நெஞ்சே தன்னை துன்புறுத்தும்.
📖 (குறள் – 0294) 📖
📖 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
📖 உள்ளத்து ளெல்லாம் உளன்.
🌻 உள்ளத்தால் நினைப்பதே, பொய்மை இன்றி இருக்கும்
🌻 உலக்கத்தார் உள்ளத்தில் எல்லாம் இருக்கும்.
📖 (குறள் – 0295) 📖
📖 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
📖 தானஞ்செய் வாரின் தலை.
🌻 மனதுடன் வாய்மையாக பேசுபவர்,
🌻 தவம் மற்றும் தானம் செய்பவர்களை விட தலைசிறந்தவர்.
📖 (குறள் – 0296) 📖
📖 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
📖 எல்லா அறமுந் தரும்.
🌻 பொய்யற்ற தன்மைப் போல் புகழுடையது இல்லை.
🌻 ஏமாற்றாத தன்மை எல்லா நன்மையையும் தரும்.
📖 (குறள் – 0297) 📖
📖 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
📖 செய்யாமை செய்யாமை நன்று.
🌻 பொய்மையை பொய்யாக்கி வாழ்ந்தால்,
🌻 மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும்.
📖 (குறள் – 0298) 📖
📖 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
📖 வாய்மையால் காணப் படும்.
🌻 வெளிச்சுத்தம் தண்ணீரால் ஏற்படும்.
🌻 உள்ளே உள்ள உள்ளத்தின் சுத்தம் வாய்மையால் அறியப்படும்.
📖 (குறள் – 0299) 📖
📖 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
📖 பொய்யா விளக்கே விளக்கு.
🌻 இருள்நீக்க ஏற்றப்படும் விளக்குகளோ அல்லது அறியாமை நீக்க விளக்கப்படும் விளக்கங்களோ விளக்கு ஆகாது.
🌻 உதரணமாக இருப்பவருக்கு பொய்யற்ற விளக்கே விளக்கு.
📖 (குறள் – 0300) 📖
📖 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
📖 வாய்மையின் நல்ல பிற.
🌻 நான் உண்மையாய் அறிந்தவற்றுள் இல்லை என தோன்றுவது,
🌻 வாய்மையை விட நல்ல ஒன்று.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(030 – வாய்மை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது.
🌻 பொய்யும் உண்மை போன்றது, நன்மை தரும் சமயத்தில்.
🌻 தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம்.
🌻 மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார்.
🌻 இதுவே தானம் தவம் கடந்த மேலானது.
🌻 நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும்.
🌻 வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும்.
🌻 உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈