👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 029 கள்ளாமை 📖 (Kallamai)
📖 (குறள் – 0281) 📖
📖 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
📖 கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
🌻 எள்ளி நகைக்கக் கூடாது என்று விரும்புபவர்,
🌻 எப்போதும் திருட்டுத்தனம் தோன்றாமல் காக்க வேண்டும் தன் நெஞ்சை.
📖 (குறள் – 0282) 📖
📖 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
📖 கள்ளத்தால் கள்வேம் எனல்.
🌻 மனத்தால் எண்ணுவதும் குற்றமாகும்
🌻 அடுத்தவர் பொருளை திருட்டுத் தனத்தால் திருடலாம் என்று.
📖 (குறள் – 0283) 📖
📖 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
📖 ஆவது போலக் கெடும்.
🌻 திருட்டுத் தனத்தால் உருவாகிய செல்வம்,
🌻 அளவு குறைந்து வளர்வதுப் போல் கெட்டுவிடும்.
📖 (குறள் – 0284) 📖
📖 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
📖 வீயா விழுமம் தரும்.
🌻 திருட்டுத் தனத்தால் தோன்றிய காதல், விளைவிப்பது
🌻 அழியா துன்பமே ஆகும்.
📖 (குறள் – 0285) 📖
📖 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
📖 பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
🌻 இயற்கையின் பரிசை எண்ணி அன்பு மேலோங்கி வாழ்தல் என்பது,
🌻 பொருள்களைப் பார்த்து பொறாமை அடைபவருக்கு இல்லை.
📖 (குறள் – 0286) 📖
📖 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
📖 கன்றிய காத லவர்.
🌻 அளவை தீர்மானித்து செயல்களை செய்யாதவர்கள்,
🌻 திருட்டுத்தனத்தில் மிகவும் ஆர்வம் அடைவார்கள்.
📖 (குறள் – 0287) 📖
📖 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
📖 ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
🌻 திருட்டுத்தனம் என்ற திடமான செயல்,
🌻 தேவைகளின் அளவை அறிந்து கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.
📖 (குறள் – 0288) 📖
📖 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
📖 களவறிந்தார் நெஞ்சில் கரவு.
🌻 தேவைகளின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சம் அறத்துடன் இருப்பதைப்போலவே,
🌻 திருட்டுத்தனம் அறிந்த நெஞ்சில் வஞ்சனை இருக்கும்.
📖 (குறள் – 0289) 📖
📖 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
📖 மற்றைய தேற்றா தவர்.
🌻 தேவைக்கு அதிகமாக செய்து வீழ்வார்கள் திருட்டுத்தனம் மட்டுமின்றி
🌻 மற்றவற்றிலும் தேர்ச்சி அற்றவர்களே.
📖 (குறள் – 0290) 📖
📖 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
📖 தள்ளாது புத்தே ளுளகு.
🌻 திருடருக்கு உயிர் நிலைத்தல் சாத்தியம் இல்லை,
🌻 திருடர்களுக்கும் தெய்வீக உலகம் சாத்தியம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(029 – கள்ளாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பிறர் ஏளனம் செய்யாதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது.
🌻 மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார்.
🌻 தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈