👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 031 வெகுளாமை 📖 (Vegulamai)
📖 (குறள் – 0301) 📖
📖 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
📖 காக்கின்என் காவாக்கா லென்.
🌻 செல்லத்தகுந்த இடத்தில் காப்பவரே சினத்தை காப்பவர், செல்லத்தகாத இடத்தில்
🌻 அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என்ன?
📖 (குறள் – 0302) 📖
📖 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
📖 இல்அதனின் தீய பிற.
🌻 செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது, செல்லத் தகுந்த இடத்திலும்
🌻 அதைவிட தீமையானது இல்லை,
📖 (குறள் – 0303) 📖
📖 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
📖 பிறத்தல் அதனான் வரும்.
🌻 மறுத்துவிட வேண்டும் (சினத்தை) கோபத்தை யாராக இருப்பினும், தீமை
🌻 பிறப்பது அதனால் வரும்.
📖 (குறள் – 0304) 📖
📖 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
🌻 இன்பத்தையும் கொண்டாட்டத்தையும் கொன்றுவிடும் சினத்தை விட,
🌻 வேறு பகையும் உண்டோ.
📖 (குறள் – 0305) 📖
📖 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
📖 தன்னையே கொல்லுஞ் சினம்.
🌻 தன்னை தானே காத்துக்கொள்ள சினம் வராமல் காக்க வேண்டும். இல்லையென்றால்
🌻 தன்னையே கொன்றுவிடும் சினம்.
📖 (குறள் – 0306) 📖
📖 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
📖 ஏமப் புணையைச் சுடும். 📖
🌻 சினம் என்பது தன்னை சேர்ந்தவரை அழிப்பது மட்டுமின்றி இனம் என்ற
🌻 பெரிய கடலையே வற்ற செய்துவிடும்.
📖 (குறள் – 0307) 📖
📖 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
📖 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
🌻 சினத்தை சிறந்ததாக எண்ணி போற்றுபவர் அடையும் கெடுதல்,
🌻 பூமியை கையால் அடித்து வலியால் துடிப்பதைப் போன்றது.
📖 (குறள் – 0308) 📖
📖 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
📖 புணரின் வெகுளாமை நன்று.
🌻 மலர் பறித்து வீசுவதைப் போல் துன்பம் செய்தாலும்,
🌻 இணக்கம் கொள்ள வந்தால் சினம் அன்றி சேர்த்துக்கொள்வது நன்று.
📖 (குறள் – 0309) 📖
📖 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
📖 உள்ளான் வெகுளி எனின்.
🌻 நினைத்ததை எல்லாம் உடனே அடையும் உள்ளத்தில்
🌻 சினம் இருந்தால் எப்படி சாத்தியமாகும்?
📖 (குறள் – 0310) 📖
📖 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
📖 துறந்தார் துறந்தார் துணை.
🌻 மரணித்தவர் (சினம் கொண்டவர்) மரணித்தவருக்கு ஒப்பானவர் சினத்தை
🌻 விட்டோழித்தவர் துறவிக்கும் துனையாகிறார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(031 – வெகுளாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது.
🌻 சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும்.
🌻 மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது.
🌻 தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம்.
🌻 உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம்.
🌻 சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈