“தன்னையே கொல்லுஞ் சினம்” – திருக்குறளின் விளக்கம்
🌹 ஒரு மனிதன் தன்னைத் தானே காக்க வேண்டும் என்றால் சினம் காக்க வேண்டும் என்கிறார்கள்,
🌹 சினத்திற்கு – குணமென்னும் குன்றேறி நின்றான் வெகுளி என்ற குறளும் உண்டு
🌹 சினத்திற்கு – வெகுளி, கோபம் என்று பல பெயர்களும் உண்டு
🌹 ஒரு மனிதன் தன்னைத்தானே காக்க வேண்டும் என்றால் முதலில் கோபப்படுவதை நிறுத்த வேண்டும்.
🌹 வாக்குவாதத்தில் கோபம் கொள்வதால் எனக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
🌹 என்னுடைய ரத்தம் சூடாகி, இதயம் வேகமாக துடித்து, கண்கள் எல்லாம் சிவந்து அதிகபட்சமாக மாரடைப்பு ஏற்பட்டு இதய துடிப்பு நின்று விடவும் வாய்ப்பு இருக்கிறது.
🌹 அப்படி என்றால் கோபப்படக்கூடாதா என்றால், கோபப்படலாம்,
🌹 கோபம் என்பது ஒரு அழகானது.
🌹 இலேசாக கோபப்படுவது நல்லது தான்,
🌹 ஆனால் கோபத்தை எப்படி காட்ட வேண்டும் என்று இருக்கிறது.
🌹 நான் கோபப்படும்போது அது என்னையோ, எதிராளியையோ பாதிக்காதவாறு பேச வேண்டும்.
🌹 இல்லை எதிராளி கோபப்படுகிறார் என்றால் அவருடைய அறியாமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றுவாறு நான் பதில் அளிக்க வேண்டும்.
🌹 இப்போது
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
என்று திருக்குறளில் இருக்கிறது.
🌹 திருவள்ளுவர் தன் மீது மிக மிக கவனமான மனிதர். அவருடைய குறளுக்கான விளக்கத்தை யாரோ ஒருவர் விளக்கம் சொல்வதைக் கேட்டு புரிந்து கொள்ளக்கூடாது.
🌹 அதற்கு நானே விளக்கம் கொடுத்திருந்தாலும், அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது.
🌹 நீங்கள் அதை ஒரு மந்திரம் போல திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கான சரியான விளக்கம் புரிய வரும்.
🌹 சினம் காக்க வேண்டும் என்றால் நான் கோபப்படக்கூடாது என்ற முடிவுக்கு வரக்கூடாது.
🌹 கோபப்பட வேண்டும். ஆனால், கருவிகளையோ ஆயுதங்களையோ கடுமையான வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது.
🌹 சில நேரங்களில் நான் சாதாரண வார்த்தையை பயன்படுத்தினாலும், எதிராளி அதை கடுமையான வார்த்தையாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
🌹 அதனால் எதிராளியின் அறியாமையை புரிந்து கொண்டு, நீங்கள் உங்கள் மனதில் சலனம் இல்லாமல் வார்த்தைகளை சரியாக கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும்.
🌹 அதாவது, நீங்கள் உங்கள் மீது கவனமாக இருந்து உங்களை இழக்காமல் கோபப்பட்டால் நீங்கள் சரிதான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025