👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 017 அழுக்காறாமை 📖 (alukkattramai)
📖 (குறள் – 0161) 📖
📖 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
🌻 ஒழுக்கம் மாறாது இருக்க, ஒருவர் தன் மனதில்,
🌻 பொறாமை அற்ற இயல்பை பெறவேண்டும்.
📖 (குறள் – 0162) 📖
📖 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
🌻 விரும்ப வேண்டியதில் நிகரானது இல்லை, யாரிடத்திலும்
🌻 பொறாமைபெறா நிலையை பெற்றால்.
📖 (குறள் – 0163) 📖
📖 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
🌻 அறச் செயல்கள் தேவையற்றது என்பவர்கள், பிறச் செயல்களையும்
🌻 செய்யாமல் அழுக்கற்றுப் போவார்கள்.
📖 (குறள் – 0164) 📖
📖 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
🌻 அழுக்கு மனதுடன் (பொறாமை) தேவையற்றதை செய்யமாட்டார்கள், இழிவான குணத்தால்
🌻 ஏற்படும் துன்பத்தை அறிந்து.
📖 (குறள் – 0165) 📖
📖 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
🌻 அழுக்கு மனம்(பொறாமை) உடையவர்கள் அதைசார்ந்து இருக்கமாட்டார்கள்.
🌻 வழக்காக மாறும் துன்பம் அது என்பதால்.
📖 (குறள் – 0166) 📖
📖 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
🌻 கொடுப்பதை பொறாமையால் தடுப்பவன் உறவுகளும், உடுப்பதும்,
🌻 உண்ணுவதும் இல்லாமல் கெட்டு போகும்.
📖 (குறள் – 0167) 📖
📖 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
🌻 ஆர்வமுடன் அழுக்கு மனம் (பொறாமை) உடையவனை செயல்களின் நாயாகி
🌻 தன் ஆற்றலை காட்டி விடும்.
📖 (குறள் – 0168) 📖
📖அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
🌻 அழுக்கு மனம்(பொறாமை) என்ற பாவச்செயல், திருவை
🌻 தீய வழியில் தள்ளி விடும்.
📖 (குறள் – 0169) 📖
📖 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
🌻 அழுக்கான நெஞ்சம் கொண்டவரின் செயல்களும், செம்மையானவரின்
🌻 அழிவும் நினைக்கப் படும்.
📖 (குறள் – 0170) 📖
📖 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
📖 பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
🌻 அழுக்கு மனம் அற்றவரை உலகம் அகற்றிவிடுவது இல்லை,
🌻 அழுக்கு மனம் உள்ளவர் எவ்வளவு அடைந்தாலும் நிறைவடைவது இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(017 – அழுக்காறாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர்.
🌻 பகைவர் தரும் அழிவைவிட பொறாமை மிகப்பெரிய அழிவை தந்துவிடும்.
🌻 பொறமையுள்ளவர் பிறவி மூப்போ, பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈