👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 018 வெஃகாமை 📖 (Veqkaamai)
📖 (குறள் – 0171) 📖
📖 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
📖 குற்றமும் ஆங்கே தரும்.
🌻 நடுநிலை தவறி நல்ல பொருள் என்று வேட்கை கொண்டால்,
🌻 குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்து விடும்.
📖 (குறள் – 0172) 📖
📖 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
📖 நடுவன்மை நாணு பவர்.
🌻 பயன்பாடு கருதி வேட்கை கொண்டு பழிக்கப்படுவதை செய்யமாட்டார்கள்.
🌻 நடுநிலைக்கு அஞ்சும் நபர்கள்.
📖 (குறள் – 0173) 📖
📖 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
📖 மற்றின்பம் வேண்டு பவர்.
🌻 சிறிய இன்பத்திற்காக வேட்கை கொண்டு,
🌻 நீதியற்றதை செய்யமாட்டார்கள் மாறாத இன்பம் நாடுபவர்கள்.
📖 (குறள் – 0174) 📖
📖 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
📖 புன்மையில் காட்சி யவர்.
🌻 இல்லாமை அடைந்தோம் என்று வேட்கை கொள்ள மாட்டார்கள்,
🌻 புலன்களைவென்ற மனித இனத்தில் பார்க்க வேண்டியாவர்கள்.
📖 (குறள் – 0175) 📖
📖 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
📖 வெஃகி வெறிய செயின்.
🌻 புரிதல் அற்ற தன்மை (மனச் சிதைவு) அறிவாகிவிடும்
🌻 யாராக இருப்பினும் வேட்கை கொண்டு வெறியுடன் நடந்தால்.
📖 (குறள் – 0176) 📖
📖 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
📖 பொல்லாத சூழக் கெடும்.
🌻 அருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நின்றவர்,
🌻 பொருள் மீது வேட்கை கொண்டால் பொல்லாப்பு வந்து அருள் வாழ்வு அழியும்.
📖 (குறள் – 0177) 📖
📖 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
📖 மாண்டற் கரிதாம் பயன்.
🌻 விரும்ப வேண்டாம் வேட்கையால் வருவதை,
🌻 அதன் விளைவோ மரணித்தவர் அடைந்த பயன் போன்றது.
📖 (குறள் – 0178) 📖
📖அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
📖 வேண்டும் பிறன்கைப் பொருள்.
🌻 அழியாமை செல்வத்திற்கு எதுவென்றால்,
🌻 வேட்கை கொள்ளாமை வேண்டும் பிறர் பயன்படுத்தும் பொருளின் மீது.
📖 (குறள் – 0179) 📖
📖 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
📖 திறன்அறிந் தாங்கே திரு.
🌻 நீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து,
🌻 உயர்வு வந்து சேரும்.
📖 (குறள் – 0180) 📖
📖 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
📖 வேண்டாமை என்னுஞ் செருக்கு.
🌻 கேட்டை விளைவிக்கும் என்று எண்ணவேண்டாம் வேட்கையை,
🌻 வெற்றியை விளைவிக்கும் வேண்டுதல் அற்ற மனமகிழ்ச்சி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(018 – வெஃகாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நடுநிலையற்ற வேட்கை நல்லதல்ல.
🌻 பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது.
🌻 ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும்,
🌻 அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது.
🌻 வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈