👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 097 மானம் 📖 (Manam)
📖 (குறள் – 961) 📖
📖 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
📖 குன்ற வருப விடல்.
🌻 அத்தியாவசியமான சிறப்புகள் உடையது என்றாலும்
🌻 அதை அற்பமான செயல் செய்து அடையக் கூடாது.
📖 (குறள் – 0962) 📖
📖 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
📖 பேராண்மை வேண்டு பவர்.
🌻 சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன்
🌻 திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.
📖 (குறள் – 0963) 📖
📖 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
📖 சுருக்கத்து வேண்டும் உயர்வு.
🌻 பெருமைக்குறிய இடம் அடைந்தால் பணிவுடன் இருக்க வேண்டும். சிறுமையான
🌻 சுருக்கத்தில் தன் உயர்வை காக்க வேண்டும்.
📖 (குறள் – 0964) 📖
📖 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
📖 நிலையின் இழிந்தக் கடை.
🌻 தலையில் இருந்து திடமற்று உதிர்ந்தாலும் மக்காத மயிர் போன்றவர் மனித கூட்டத்தில் இருந்து
🌻 தன் நிலை இழிவான இறுதியை அடைந்தவர்.
📖 (குறள் – 0965) 📖
📖 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
📖 குன்றி அனைய செயின்.
🌻 மலை போன்றவர் என்றாலும் குறைந்து தாழ்ச்சி அடைவார் குற்றமானதை
🌻 குறைந்தளவு செய்தால்.
📖 (குறள் – 0966) 📖
📖 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
📖 இகழ்வார்பின் சென்று நிலை.
🌻 புகழ் இல்லாமல் புதுமை நாடி உயர்வு பெறாமல் என்ன பயன்?
🌻 இகழ்வானவர்களின் பின் சென்றால் வரும் இழிநிலை.
📖 (குறள் – 0967) 📖
📖 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
📖 கெட்டான் எனப்படுதல் நன்று.
🌻 ஒத்திசைவு இல்லாமல் புரியாத ஒருவர் பின் சென்று வாழும் அந்த நிலையைவிட
🌻 கொட்டவன் எனப்படுதல் நன்று.
📖 (குறள் – 0968) 📖
📖 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
📖 பீடழிய வந்த இடத்து.
🌻 மருந்தால் சாதிக்க முடியாது ஊனில் உயிர் நிலைக்கும் வாழ்க்கை. எனவே பெருந்தகமை என்பது
🌻 பீடை வந்த இடத்திலும் உயிரை மாய்க்காது இருத்தலே.
📖 (குறள் – 0969) 📖
📖 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
📖 உயிர்நீப்பர் மானம் வரின்.
🌻 மயிர் நீங்கினால் கவரிமான் வாழாது என்றால் அதுபோலவே
🌻 உயிர் நீப்பர் மானம் வரின்.
📖 (குறள் – 0970) 📖
📖 இளிவரின் வாழாத மானம் உடையார்
📖 ஒளிதொழுது ஏத்தும் உலகு.
🌻 அசிங்கம் ஏற்பட்டதால் வாழ்வதை தவிர்த்த மானம் உள்ளவர்களை வழிகாட்டும்
🌻 ஒளியாக மதித்து வணங்கும் உலகம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(097 – மானம்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அதிகபட்ச தேவை தீர்க்கும் என்றாலும் அதை குறுக்கு வழியில் அடைய நினைப்பதே மானம் என்பாதல் சிறப்பற்ற ஒன்றை செய்யமாட்டர் சிறப்புடன் வாழ நினைப்பவர்.
🌻 தகுதி வளர்ந்தவர் உயர்ந்த நிலையில் பணிவாகவும் தாழ்ச்சி ஏற்படும் பொழுது தன்னை உயர்வாகவும் தற்காத்துக் கொள்வார்.
🌻 உதிர்ந்த மயிர் சிதையாது என உணர்ந்து மனித கூட்டத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்து நிலையாக நிறுத்த முடியாத உயிருக்கு மதிப்பளித்து மனித குலத்திற்கே வழிகாட்டியாக வாழ்வதே மானம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈