👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 096 குடிமை 📖 (Kudimai)
📖 (குறள் – 951) 📖
📖 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
📖 செப்பமும் நாணும் ஒருங்கு.
🌻 நற்குடியில் பிறந்தவரைத் தவிர மற்றவருக்கு இல்லை இயல்பாகவே
🌻 திடமாக இருப்பதும் நாணுவதும் சேர்ந்து.
📖 (குறள் – 0952) 📖
📖 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
📖 இழுக்கார் குடிப்பிறந் தார்.
🌻 சுயக்கட்டுபாடு, உண்மை, நாணம் என இம்மூன்றையும்
🌻 இழக்கமாட்டார்கள் நற்குடி பிறந்தவர்கள்.
📖 (குறள் – 0953) 📖
📖 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
📖 வகையென்ப வாய்மைக் குடிக்கு.
🌻 கொண்டாட்டம், கொடுக்கும் குணம், இனிமையாக பேசுதல், இகழாது இருத்தல் என இவை நன்கும்
🌻 வசப்பட்டிருக்கும் உண்மையான குடிக்கு.
📖 (குறள் – 0954) 📖
📖 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
📖 குன்றுவ செய்தல் இலர்.
🌻 பலகோடி பெற முடியும் என்றாலும் நற்குடி பிறந்தவர்
🌻 குற்றமானதை செய்ய இயலாதவர்.
📖 (குறள் – 0955) 📖
📖 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
📖 பண்பில் தலைப்பிரிதல் இன்று.
🌻 கொடுத்து உதவுவதில் வறுமையில் வீழ்ந்தாலும் பழைமை வாய்ந்த குடியின்
🌻 கொடுக்கும் பண்பில் இருந்து பிரிவது இல்லை.
📖 (குறள் – 0956) 📖
📖 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
📖 குலம்பற்றி வாழ்தும்என் பார்.
🌻 வஞ்சனை செய்து வழியற்றதை செய்யமாட்டார் குறையற்ற
🌻 மனித குலம் நான் என பற்றி வாழ்பவர்.
📖 (குறள் – 0957) 📖
📖 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
📖 மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
🌻 நற்குடியில் பிறந்தவர் இடத்தில் வெளிப்படும் குற்றம் வானத்து
🌻 முழுநிலவு போல் பெரிதாக தெரியும்.
📖 (குறள் – 0958) 📖
📖 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
📖 குலத்தின்கண் ஐயப் படும்.
🌻 குண நலனில் அக்கரையற்ற தன்மை தோன்றினால் அவன்
🌻 மனிதகுலமா? என ஐயம் தோன்றும்.
📖 (குறள் – 0959) 📖
📖 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
📖 குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
🌻 என்ன மாதரியான நிலத்தில் இருந்தார் என்பதை கால் காட்டிவிடும்
🌻 அதுபோல் குலத்தின் தன்மையை வாய்ச்சொல் காட்டும்.
📖 (குறள் – 0960) 📖
📖 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
📖 வேண்டுக யார்க்கும் பணிவு.
🌻 நலமுடன் இருக்க வேண்டும் என்றால் நாணத்தை உடையாக்க வேண்டும். நற்குடி நான் என வேண்டும் என்றால்
🌻 யாருக்கும் வேண்டும் பணிவு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(096 – குடிமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 திடத்தனம்மையும் நாணுதலும் நற்குடிக்கு அழகு.
🌻 சுயக்கட்டுப்பாடும், உண்மையும், உற்சாகமும், கொடுக்கும் பண்பும் நற்குடியின் இயல்பு.
🌻 எதன் பொருட்டும் குற்றம் செய்யாத நற்குடி பிறந்தவரின் சிறிய தவறும் வானத்து மதியாய் வெளிப்படும்.
🌻 காலில் ஒட்டிய மண் நிலத்தின் தன்மை உணர்த்துவது போல் நற்குடி பிறந்தவர் வாய்ச்சொல் உணர்த்தும்.
🌻 பணிவே நற்குடியாக மாற்றும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (097-மானம்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈