👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 098 பெருமை 📖 (Perumai)
📖 (குறள் – 971) 📖
📖 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
📖 அஃதிறந்து வாழ்தும் எனல்.
🌻 ஒருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து
🌻 உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.
📖 (குறள் – 0972) 📖
📖 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
📖 செய்தொழில் வேற்றுமை யான்.
🌻 ஒத்தபடி பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு என்பது
🌻 அதனதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.
📖 (குறள் – 0973) 📖
📖 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
📖 கீழல்லார் கீழல் லவர்.
🌻 செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும்
🌻 நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.
📖 (குறள் – 0974) 📖
📖 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
📖 தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
🌻 ஒருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து
🌻 தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.
📖 (குறள் – 0975) 📖
📖 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
📖 அருமை உடைய செயல்.
🌻 பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை
🌻 அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.
📖 (குறள் – 0976) 📖
📖 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
📖 பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
🌻 சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை
🌻 போற்றி ஏற்கும் நோக்கம்.
📖 (குறள் – 0977) 📖
📖 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
📖 சீரல் லவர்கண் படின்.
🌻 அழிவை நோக்கியே செயல்படுவார்கள்
🌻 சீரல்லாதவர்களுக்கு சிறப்புகள் மட்டுமே கிடைத்தாலும்.
📖 (குறள் – 0978) 📖
📖 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
📖 அணியுமாம் தன்னை வியந்து.
🌻 என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே
🌻 தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.
📖 (குறள் – 0979) 📖
📖 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
📖 பெருமிதம் ஊர்ந்து விடல்.
🌻 பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை
🌻 ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.
📖 (குறள் – 0980) 📖
📖 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
📖 குற்றமே கூறி விடும்.
🌻 தேவையற்றதை மறைப்பதே பெருமை சிறுமையோ
🌻 குற்றங்களை மட்டுமே எடுத்துரைக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(098 – பெருமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை.
🌻 உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை.
🌻 மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே.
🌻 தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடைப்பெண் போன்றவர்,
🌻 தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈