👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 070 மன்னரை சேர்ந்து ஒழுகல் 📖 (Mannarai sernthu ozlugal)
📖 (குறள் – 0691) 📖
📖 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
📖 இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
🌻 தீ மூட்டி குளிர்காயும் பொழுது எப்படி விலகாமல் சேராமல்
🌻 பக்குவமாய் இருப்பர்களோ அப்படி மன்னனிடம் பழக வேண்டும்.
📖 (குறள் – 0692) 📖
📖 மன்னர் விழைப விழையாமை மன்னரால்
📖 மன்னிய ஆக்கந் தரும்.
🌻 ஆட்சியாளர் அடைய விரும்புவதை குறுக்கிட்டு அடையாமல் விலகினால் ஆட்சியாளரால்
🌻 நிலைத்த உயர்வு கிடைக்கும்.
📖 (குறள் – 0693) 📖
📖 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
📖 தேற்றுதல் யார்க்கும் அரிது.
🌻 பாராட்டப் படுவதென்றால் அரிதானதை பாரட்ட வேண்டும். தவறிவிட்டால்
🌻 அத்தகைய சூழல் கிடைப்பது யாருக்கும் அரிது.
📖 (குறள் – 0694) 📖
📖 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
📖 ஆன்ற பெரியா ரகத்து.
🌻 சத்தமாக பேசுவதையும், சரிசமமாக சிரிப்பதையும்
🌻 சிறந்த பெரியவர்களிடம் தவிர்க்க வேண்டும்.
📖 (குறள் – 0695) 📖
📖 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
📖 விட்டக்கால் கேட்க மறை.
🌻 உயர்ந்தோர் எதைச் சொன்னாலும் தவிர்காமல், அதை தொடரச் சொல்லாமல், மற்ற ஒன்றை சொன்னாலும்
🌻 விலகாமல் மறை போல் கேட்க வேண்டும்.
📖 (குறள் – 0696) 📖
📖 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
📖 வேண்டுப வேட்பச் சொலல்.
🌻 ஆட்சியாளரின் அகச்சூழலை குறிப்பறிந்து, தகுந்த நேரம் அறிந்து, வெறுக்காதபடி
🌻 வேண்டியதை விரும்பும்படி சொல்லவேண்டும்.
📖 (குறள் – 0697) 📖
📖 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
📖 கேட்பினும் சொல்லா விடல்.
🌻 வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு
🌻 கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.
📖 (குறள் – 0698) 📖
📖 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
📖 ஒளியோடு ஒழுகப் படும்.
🌻 ஆட்சியாளரை என்னைவிட இளையவர் என்றோ, உறவுக்காரர் என்றோ இகழ்வாக பார்க்காமல் அவர் இருப்பின்
🌻 நிலைக்கு எற்ப மதிக்கப்படும்.
📖 (குறள் – 0699) 📖
📖 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
📖 துளக்கற்ற காட்சி யவர்.
🌻 ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டர் என்பதற்காக ஏற்க முடியாததை செய்யமட்டார்
🌻 தெளிந்த பார்வை உள்ளவர்.
📖 (குறள் – 0700) 📖
📖 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
📖 கெழுதகைமை கேடு தரும்.
🌻 நெடுங்கால நெருக்கம் என்று பண்பற்றதை செய்யும்
🌻 உரிமை கொண்டாடுவது கேடு உண்டாக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(070 – மன்னரை சேர்ந்து ஒழுகல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சிளார்களிடம் இருக்கவேண்டும்.
🌻 ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம்.
🌻 அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம்.
🌻 இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈