👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 069 தூது 📖 (Thoothu)
📖 (குறள் – 0681) 📖
📖 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
📖 பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
🌻 அன்பை உடமையாகவும், சிறந்த குடும்பத்தை சேர்ந்தவராகவும், ஆட்சியாளரை மதிக்கும்
🌻 பண்புள்ளவராகவும் இருப்பது தூது உரைப்பவர்களின் பண்பு.
📖 (குறள் – 0682) 📖
📖 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
📖 இன்றி யமையாத மூன்று.
🌻 அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு
🌻 முக்கியமான மூன்று.
📖 (குறள் – 0683) 📖
📖 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
📖 வென்றி வினையுரைப்பான் பண்பு.
🌻 நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து
🌻 வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.
📖 (குறள் – 0684) 📖
📖 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
📖 செறிவுடையான் செல்க வினைக்கு.
🌻 அறிவு, உருவம், தேர்ந்த கல்வி, இம் மூன்றையும்
🌻 செழுமையான அடைந்தவர் செல்லலாம் செயல்முடிக்க.
📖 (குறள் – 0685) 📖
📖 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
📖 நன்றி பயப்பதாந் தூது.
🌻 தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து
🌻 நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.
📖 (குறள் – 0686) 📖
📖 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
📖 தக்கது அறிவதாம் தூது.
🌻 கற்று அறிந்து காண்பதற்கு அஞ்சாமல் சொல்லவேண்டியதை சொல்லி தகுந்த நேரத்தில்
🌻 சரியானதை அறிவதே தூது.
📖 (குறள் – 0687) 📖
📖 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
📖 எண்ணி உரைப்பான் தலை.
🌻 ஆற்றவேண்டிய கடமை அறிந்து, தகுந்த காலத்தை கருத்தில் கொண்டு, இடத்தை அறிந்து,
🌻 சிந்தித்து எடுத்துரைப்பதே தூதின் தலைமையானது.
📖 (குறள் – 0688) 📖
📖 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
📖 வாய்மை வழியுரைப்பான் பண்பு.
🌻 தேவையற்றதை நாடாத தூய்மை, நன்மைக்கு துணையாதல், அச்சமற்ற துணிவு இம்மூன்றின்
🌻 உண்மைத் தன்மையுடன் இருப்பதே தூதுரைப்பவர் பண்பு.
📖 (குறள் – 0689) 📖
📖 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
📖 வாய்சேரா வன்க ணவன்
🌻 தவிர்க வேண்டியதை அரசுக்கு எடுத்துரைப்பான் வலிக்காமல்
🌻 சோர்வற்ற வார்த்தை பயன்படுத்தும் திடமானவன்.
📖 (குறள் – 0690) 📖
📖 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
📖 உறுதி பயப்பதாம் தூது.
🌻 இயற்கையின் இறுதிப் பயன் உடனே கிடைப்பினும் எந்தக்குறையும் இல்லாமல் தன் மன்னனின் நிலையை
🌻 உறுதிப்பட உரைப்பதே தூது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(069 – தூது) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அன்பு நற்குடி, மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர்.
🌻 தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும்.
🌻 மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (070-மன்னரை சேர்ந்து ஒழுகல்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈