0️⃣0️⃣ 📖 கணபதி காப்பு 📖
📖 தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
📖 ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
📖 சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
📖 காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
0️⃣1️⃣ 📖 மோட்ச சாதனம் பெற 📖
📖 நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
📖 என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
📖 ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
0️⃣2️⃣ 📖 ஞானமும் நல்வித்தையும் பெற 📖
📖 உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
📖 மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
📖 துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
📖 விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
0️⃣3️⃣ 📖 பிரிந்தவர் ஒன்று சேர 📖
📖 துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
📖 பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
📖 கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
📖 அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
0️⃣4️⃣ 📖 குடும்பக் கவலையிலிருந்து விடுபட 📖
📖 அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
📖 செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
📖 பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
📖 மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
0️⃣5️⃣ 📖 உயர் பதவிகளை அடைய 📖
📖 மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
📖 குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
📖 பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
📖 புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
0️⃣6️⃣ 📖 மனக்கவலை தீர 📖
📖 பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
📖 வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
📖 அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
📖 திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
0️⃣7️⃣ 📖 மந்திர சித்தி பெற 📖
📖 சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
📖 மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
📖 முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
📖 பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
0️⃣8️⃣ 📖 மலையென வரும் துன்பம் பனியென நீங்க 📖
📖 ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
📖 கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
📖 மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
📖 துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
0️⃣9️⃣ 📖 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட📖
📖 சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
📖 வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
📖 அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
📖 சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
1️⃣0️⃣ 📖 அனைத்தும் வசமாக 📖
📖 கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
📖 பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
📖 திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
📖 முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025