1️⃣1️⃣ 📖 இல்வாழ்க்கையில் இன்பம் பெற 📖
📖 ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
📖 வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
📖 தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
📖 கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
1️⃣2️⃣ 📖 தியானத்தில் நிலைபெற 📖
📖 கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
📖 பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
📖 நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
📖 புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
1️⃣3️⃣ 📖 வைராக்கிய நிலை எய்த 📖
📖 பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
📖 காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
📖 மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
📖 மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
1️⃣4️⃣ 📖 தலைமை பெற 📖
📖 வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
📖 சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
📖 பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
📖 சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
1️⃣5️⃣ 📖 பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற 📖
📖 தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
📖 மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
📖 விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
📖 பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
1️⃣6️⃣ 📖 முக்காலமும் உணரும் திறன் உண்டாக 📖
📖 கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
📖 ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
📖 வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
📖 அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
1️⃣7️⃣ 📖 கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய 📖
📖 அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
📖 துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
📖 பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
📖 மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
1️⃣8️⃣ 📖 மரண பயம் நீங்க 📖
📖 வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
📖 செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
📖 அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
📖 வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.
1️⃣9️⃣ 📖 பேரின்ப நிலையடைய 📖
📖 வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
📖 களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
📖 தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
📖 ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
2️⃣0️⃣ 📖 வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக 📖
📖 உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
📖 அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
📖 நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
📖 மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
2️⃣1️⃣ 📖 அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய 📖
📖 மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
📖 சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
📖 பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
📖 பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.
2️⃣2️⃣ 📖 இனிப் பிறவா நெறி அடைய 📖
📖 கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
📖 படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
📖 பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
📖 அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
2️⃣3️⃣ 📖 எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க 📖
📖 கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
📖 விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
📖 உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
📖 கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
2️⃣4️⃣ 📖 நோய்கள் விலக 📖
📖 மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
📖 அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
📖 பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
📖 பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
2️⃣5️⃣ 📖 நினைத்த காரியம் நிறைவேற 📖
📖 பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
📖 முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
📖 அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
📖 என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
2️⃣6️⃣ 📖 சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக 📖
📖 ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
📖 காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
📖 சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
📖 நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
2️⃣7️⃣ 📖 மனநோய் அகல 📖
📖 உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
📖 படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
📖 அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
📖 துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
2️⃣8️⃣ 📖 இம்மை மறுமை இன்பங்கள் அடைய 📖
📖 சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
📖 புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
📖 அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
📖 செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
2️⃣9️⃣ 📖 எல்லா சித்திகளும் அடைய 📖
📖 சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
📖 பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
📖 முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
📖 புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
3️⃣0️⃣ 📖 அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க 📖
📖 அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
📖 நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
📖 சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
📖 ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025