📖 சீதக் களபச் செந்தா மரைப்பூம்
📖 பாதச் சிலம்பு பலவிசை பாடப்
📖 பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
📖 வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
📖 பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
📖 வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
📖 அஞ்சு கரமும் அங்குச பாசமும்
📖 நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
📖 நான்ற வாயும் நாலிரு புயமும்
📖 மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 1️⃣0️⃣
📖 இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
📖 திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
📖 சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
📖 அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
📖 முப்பழ நுகரும் மூஷிக வாகன!
📖 இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
📖 தாயா யெனக்குத் தானெழுந் தருளி
📖 மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
📖 திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
📖 பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 2️⃣0️⃣
📖 குருவடி வாகிக் குவலயந் தன்னில்
📖 திருவடி வைத்துத் திறமிது பொருளென
📖 வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
📖 கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
📖 உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
📖 தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
📖 ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
📖 இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
📖 கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
📖 இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 3️⃣0️⃣
📖 தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
📖 மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
📖 ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
📖 ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
📖 ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
📖 பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
📖 இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
📖 கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
📖 மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
📖 நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 4️⃣0️⃣
📖 குண்டலி யதனிற் கூடிய அசபை
📖 விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
📖 மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
📖 காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
📖 அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
📖 குமுத சகாயன் குணத்தையும் கூறி
📖 இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
📖 உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
📖 சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
📖 எண் முகமாக இனிதெனக் கருளிப் 5️⃣0️⃣
📖 புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
📖 தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
📖 கருத்தினில் கபால வாயில் காட்டி
📖 இருத்தி முத்தி யினிதெனக் கருளி
📖 என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
📖 முன்னை வினையின் முதலைக் களைந்து
📖 வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
📖 தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
📖 இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
📖 அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 6️⃣0️⃣
📖 எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
📖 அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
📖 சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
📖 சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
📖 அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
📖 கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
📖 வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
📖 கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
📖 அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
📖 நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 7️⃣0️⃣
📖 தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
📖 வித்தக விநாயக விரைகழல் சரணே!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025