📖1️⃣📖
📖 முத்தைத்தரு பத்தித் திருநகை
📖 அத்திக்கிறை சத்திச் சரவண
📖 முத்திக்கொரு வித்துக் குருபர – எனவோதும்
📖2️⃣📖
📖 முக்கட்பர மற்குச் சுருதியின்
📖 முற்பட்டது கற்பித் திருவரும்
📖 முப்பத்துமு வர்க்கத் தமரரும் – அடிபேணப்
📖3️⃣📖
📖 பத்துத்தலை தத்தக் கணைதொடு
📖 ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
📖 பட்டப்பகல் வட்டத் திகிரியில் – இரவாகப்
📖4️⃣📖
📖 பத்தற்கிர தத்தைக் கடவிய
📖 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
📖 பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் – ஒருநாளே
📖5️⃣📖
📖 தித்தித்தெய ஒத்தப் பரிபுர
📖 நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
📖 திக்கொட்கந டிக்கக் கழுகொடு – கழுதாடத்
📖6️⃣📖
📖 திக்குப்பரி அட்டப் பயிரவர்
📖 தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
📖 சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக – எனவோதக்
📖7️⃣📖
📖 கொத்துப்பறை கொட்டக் களமிசை
📖 குக்குக்குகு குக்குக் குகுகுகு
📖 குத்திப்புதை புக்குப் பிடியென – முதுகூகை
📖8️⃣📖
📖 கொட்புற்றெழ நட்பற் றவுணரை
📖 வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
📖 குத்துப்பட ஒத்துப் பொரவல – பெருமாளே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025