👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 121 நினைத்தவர் புலம்பல் 📖 (Ninaithavar Pulambal)
📖 (குறள் – 1201) 📖
📖 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
📖 கள்ளினும் காமம் இனிது.
🌻 நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால்
🌻 மதுவை காட்டிலும் காமம் இனிது.
📖 (குறள் – 1202) 📖
📖 எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
📖 நினைப்ப வருவதொன்று ஏல்.
🌻 எப்படி என்றாலும் இனிமையானதே காமத்தில் வீழ்பவர்
🌻 நினைக்க ஒட்டிக் கொள்ள வரும் ஒன்று இல்லை.
📖 (குறள் -1203) 📖
📖 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
📖 சினைப்பது போன்று கெடும்.
🌻 நினைப்பவர் போன்று நினைக்காமல் என்னைக் கொல்வது தும்மல்
🌻 சினைப்பது போன்று கெடும்.
📖 (குறள் – 1204) 📖
📖 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
📖 ஓஒ உளரே அவர்.
🌻 நானும் உள்ளேனா ? அவரது நெஞ்சத்தில். என் நெஞ்சத்தில்
🌻 அவர் உள்ளதைப் போல்.
📖 (குறள் – 1205) 📖
📖 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
📖 எம்நெஞ்சத்து ஓவா வரல்.
🌻 தன் நெஞ்சத்தில் இருக்கும் என்னை கடிந்து கொள்பவர் வெட்கப்படுவது இல்லை
🌻 என் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்க.
📖 (குறள் – 1206) 📖
📖 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
📖 உற்றநாள் உள்ள உளேன்.
🌻 மற்றபடி நான் தன் நெஞ்சத்தில் நினைத்து வாழ வேறு உண்டோ அவரோடு
🌻 உறவுக் கொண்ட நாட்களைத் தவிர.
📖 (குறள் – 1207) 📖
📖 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
📖 உள்ளினும் உள்ளம் சுடும்.
🌻 மறந்தால் என்ன ஆவேனோ? என்பதால் மறப்பதை அறியவில்லை. மற்றபடி
🌻 நினைப்பும் என் நெஞ்சத்தை சுடுகிறது.
📖 (குறள் – 1208) 📖
📖 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
📖 காதலர் செய்யும் சிறப்பு.
🌻 எவ்வளவு நினைத்தாலும் வெறுக்க மாட்டார் அதுவே
🌻 காதலர் செய்யும் சிறப்பு.
📖 (குறள் – 1209) 📖
📖 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
📖 அளியின்மை ஆற்ற நினைந்து.
🌻 கேட்டுப் பார் என் உயிர் நீயின்றி வேறில்லை என்றவர்
🌻 அதன்படி நடக்காததால் வழியின்றி தவிக்கிறேன் நினைத்து.
📖 (குறள் – 1210) 📖
📖 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
📖 படாஅதி வாழி மதி.
🌻 நெஞ்சத்தை விடாது சென்றவரை கண்ணினால் காண
🌻 மறையாது இருந்திடு நிலவே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(121 – நினைத்தவர் புலம்பல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நினைத்தாலே இனிக்கும் தீராத இன்பம் தரும் காமம் மதுவிலும் மதிப்பானது.
🌻 எப்படி பார்த்தாலும் நினைத்தாலே இன்பம் தருவது காமம்.
🌻 நினைப்பது போல் நினைக்க மறுப்பது தும்பல் தோன்றி நிற்பது போல் இருக்கும்.
🌻 என் நெஞ்சில் அவர் இருப்பது போல் நானும் அவர் நெஞ்சில் இருப்பேன்.
🌻 என்னை கடிந்து கொண்டாலும் என் நெஞ்சில் நிலைக்கிறார்.
🌻 உறவோடு இருக்கும் தருணம் தவிர மற்றபடி அவரது நினைப்பிலே இருக்கிறேன்.
🌻 மறந்தால் வாழ்வேனோ தெரியாது என்பதால் மறப்பதில்லை இருப்பினும் நினைப்பும் என் நெஞ்சை சுடுகிறது.
🌻 நின்னத்துக் கொண்டே இருப்பதை வெறுக்காமல் இருப்பதே காதலர் சிறப்பு.
🌻 உயிரே நீதான் என்றவர் அதன்படி இல்லை என்பதால் நினைப்பால் தவிக்கிறேன்.
🌻 நிலவே மறையாதே நெஞ்சில் இருக்கும் அவரை காண கண்கள் ஏங்குகிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈