👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 120 தனிப் படர் மிகுதி 📖 (Thani padar miguthi)
📖 (குறள் – 1191) 📖
📖 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
📖 காமத்துக் காழில் கனி.
🌻 தன்னால் ஒருவரை வீழ்த்தி தானும் வீழ்ந்த நிலைப் பெற்றவரே பெற்றவர்
🌻 காமத்தால் முழுவதும் சுவைக்கத் தகுந்தக் கனி.
📖 (குறள் – 1192) 📖
📖 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
📖 வீழ்வார் அளிக்கும் அளி.
🌻 வாழ்வதற்கு வானம் நன்மை பயப்பது போல் காதலில் வீழ்பவற்கு
🌻 வீழ்பவரே நன்மை அளிக்கின்றார்கள்.
📖 (குறள் -1193) 📖
📖 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
📖 வாழுநம் என்னும் செருக்கு.
🌻 காதலில் வீழ்பவர் வீழ்த்தியவர் என இவர்களுக்கு அமையுமே
🌻 நாம் வாழ்கிறோம் என்ற செருக்கு.
📖 (குறள் – 1194) 📖
📖 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
📖 வீழப் படாஅர் எனின்.
🌻 காதலில் வீழ்பவர் நட்புக்கு உகந்தவராக ஏற்கமாட்டார்கள் தன்னால் ஒருவர் காதலில் விழ்ந்தும்
🌻 தான் வீழப்படவில்லை என்றால்.
📖 (குறள் – 1195) 📖
📖 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
📖 தாம்காதல் கொள்ளாக் கடை.
🌻 நாம் காதல் கொண்ட அவர் நமக்கு என்ன செய்ய முடியும்
🌻 தான் காதல் கொள்ளவில்லை என்றால்.
📖 (குறள் – 1196) 📖
📖 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
📖 இருதலை யானும் இனிது.
🌻 ஒருதலையாய் இல்லாமல் காமம் என்பது காவடி போல்
🌻 இருதலையாய் இருப்பது என்றும் இனியது.
📖 (குறள் – 1197) 📖
📖 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
📖 ஒருவர்கண் நின்றொழுகு வான்.
🌻 பருவம் பூப்பதையும் தேவை ஏற்படுவதையும் அறியமுடியாத காமத்திற்கான தேவன்
🌻 ஒருவர் மீது மட்டும் நின்று செயல்படுகிறான்.
📖 (குறள் – 1198) 📖
📖 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
📖 வாழ்வாரின் வன்கணார் இல்.
🌻 காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில்
🌻 வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.
📖 (குறள் – 1199) 📖
📖 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
📖 இசையும் இனிய செவிக்கு.
🌻 நாடி வரவில்லை கொடுக்கவில்லை என்றாலும் அவரிடத்தில் வரும் வார்த்தைகள்
🌻 இசைபோல் இனிமையானது செவிக்கு.
📖 (குறள் – 1190) 📖
📖 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
📖 செறாஅஅய் வாழிய நெஞ்சு.
🌻 உறவை நாடாதவர்க்கு தான் உற்ற நோயை உரைப்பாய் கடலைத்
🌻 தூர்பதற்கு முயல்வதைப்போல் என் நெஞ்சே நீ வாழ்க.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(120 – தனிப் படர் மிகுதி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர்.
🌻 வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது.
🌻 வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள்.
🌻 வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை.
🌻 காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை.
🌻 காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல்.
🌻 இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான்.
🌻 அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது.
🌻 காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர்.
🌻 நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈