👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 119 பசப்பு உறு பரவல் 📖 (pasappu ooru paraval)
📖 (குறள் – 1181) 📖
📖 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
📖 பண்பியார்க்கு உரைக்கோ பிற.
🌻 நயம்பட பேசியவர்க்கு ஒப்புக் கொள்ளாமல் உடன்பட்டுப் போனேன் எனவே பசலை
🌻 படர்ந்ததை பிறர்க்கு எப்படி உரைப்பேன்.
📖 (குறள் – 1182) 📖
📖 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
📖 மேனிமேல் ஊரும் பசப்பு.
🌻 அவர் தந்தார் என்பதால் இவரைப் போல் என்
🌻 மேனிமேல் ஊர்ந்து பரவுகிறது பசப்பு.
📖 (குறள் -1183) 📖
📖 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
📖 நோயும் பசலையும் தந்து.
🌻 அழகையும் வடிவையும் அவர் கொண்டார் கைம்மாறாக
🌻 நோயும் பசலையும் தந்து.
📖 (குறள் – 1184) 📖
📖 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
📖 கள்ளம் பிறவோ பசப்பு.
🌻 நினைத்துக் கொண்டே இருக்கிறேன் மற்றபடி அவரது திறத்தை உரைத்துக் கொண்டு இருக்கிறேன் இருப்பினும்
🌻 கள்ளத்தனமாகவோ பிற வழியிலோ பசலையும் வந்தது.
📖 (குறள் – 1185) 📖
📖 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
📖 மேனி பசப்பூர் வது.
🌻 அப்பக்கம் காதலர் பிரிந்து செல்வார் இப்பக்கம் எனது
🌻 மேனியில் பசலையும் வந்தது.
📖 (குறள் – 1186) 📖
📖 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
📖 முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
🌻 விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன்
🌻 முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.
📖 (குறள் – 1187) 📖
📖 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
📖 அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
🌻 கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே
🌻 அள்ளிக் கொண்டது பசப்பு.
📖 (குறள் – 1188) 📖
📖 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
📖 துறந்தார் அவர்என்பார் இல்.
🌻 பசலை இவளுக்கு படர்ந்தது என்பதைத் தவிர இவளை
🌻 காதலன் துறந்தார் என்று சொல்பவர் இல்லை.
📖 (குறள் – 1189) 📖
📖 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
📖 நன்னிலையர் ஆவர் எனின்.
🌻 உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர்
🌻 நல்ல நிலை உடையவர் என்றால்.
📖 (குறள் – 1190) 📖
📖 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
📖 நல்காமை தூற்றார் எனின்.
🌻 பசலை படர்ந்தவள் என்று பெயர் பெறுதல் நன்றே நயமாக பேசி பிரிந்தவர்
🌻 வாக்கு மாறியவன் என தூற்றார் என்றால்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(119 – பசப்பு உறு பரவல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை.
🌻 பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது.
🌻 என் அழகையும் நாணத்தையும் அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார்.
🌻 அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே.
🌻 அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே.
🌻 விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது.
🌻 பசலை படந்தது என்றே கூறுகின்றார்கள்.
🌻 காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை.
🌻 எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும்.
🌻 (பசலை என்பது பிரிவு தாங்கமல் தோலில் ஏற்படும் மாற்றம்)
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈