👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 053 சுற்றாழ்தல் 📖 (Suttrazlthal)
📖 (குறள் – 0521) 📖
📖 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
📖 சுற்றத்தார் கண்ணே உள.
🌻 உரிமைக் கொண்டாட ஒன்றும் இல்லாத பொழுதும் உறவுப் பாராட்டுவது
🌻 சுற்றத்தாரிடத்தில் உண்டு.
📖 (குறள் – 0522) 📖
📖 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
📖 ஆக்கம் பலவும் தரும்.
🌻 விருப்பம் நீங்க சுற்றம் அமைந்தால் அழிவற்ற
🌻 ஆக்கம் பல உண்டாகும்.
📖 (குறள் – 0523) 📖
📖 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
📖 கோடின்றி நீர்நிறைந் தற்று.
🌻 உறவாடி மகிழாதவன் வாழ்க்கை கரையற்ற குளத்தில்
🌻 நீர் நிறையாதுப் போன்று கெடும்.
📖 (குறள் – 0524) 📖
📖 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
📖 பெற்றத்தால் பெற்ற பயன்.
🌻 அக்கம் பக்கம் உள்ள உறவுகளுடன் இணைந்து வாழ்வது
🌻 செல்வத்தால் வரும் பயன்.
📖 (குறள் – 0525) 📖
📖 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
📖 சுற்றத்தால் சுற்றப் படும்.
🌻 கொடுப்பதும் இனிமையாய் பேசுவதும் நடைமுறைப் படுத்தினால் இருக்கும்
🌻 உறவுகளுடன் மேலும் உறவுகள் வளரும்.
📖 (குறள் – 0526) 📖
📖 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
📖 மருங்குடையார் மாநிலத்து இல்.
🌻 நிறைய கொடுப்பதும் சினத்தை சேர்க்காமலும் இருப்பவர் பக்கம் இருக்கும்
🌻 சுற்றம் போல் மாநிலத்தில் மற்றவருக்கு இல்லை.
📖 (குறள் – 0527) 📖
📖 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
📖 அன்னநீ ரார்க்கே உள.
🌻 காகாம் மறைக்காமல் அழைத்து உண்ணும் செயல்போல சுற்றம்
🌻 பாராட்டுபவரின் செயலும் உள்ளது.
📖 (குறள் – 0528) 📖
📖 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
📖 அதுநோக்கி வாழ்வார் பலர்.
🌻 பொது நோக்கு அற்று அரசு பாகுபடுத்திப் பார்த்தால்
🌻 மக்களில் பலர் பாகுபாடுக் கொண்டே வாழ்வார்கள்.
📖 (குறள் – 0529) 📖
📖 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
📖 காரணம் இன்றி வரும்.
🌻 உறவினராய் இருந்து காரணம் இல்லாமல் பிரிந்தால்
🌻 மீண்டும் உறவு வரும்.
📖 (குறள் – 0530) 📖
📖 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
📖 இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
🌻 செயல்படுவர் வருத்தம் அடையாதபடி இருக்க எப்பொழுதும் விரும்ப வேண்டும்
🌻 ஆட்சியாளர்கள் அதனால் உலகமே வளமாய் மாறும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(053 – சுற்றாழ்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 இல்லாமையிலும் உறவு பாராட்டுவது உற்றார்களின் பண்பு.
🌻 விருப்பம் குறையாத உறவு ஒரு சிறப்பானது.
🌻 உறவு இல்லாத வாழ்வு கரையற்ற குளம் போன்றது.
🌻 காகம் போல் கூடி உண்ணுதல் உறவுக்கு பெருமை.
🌻 உறவு பிரிந்தாலும் மீண்டும் கூடும் வாய்ப்பு வரும்.
🌻 பிரிந்த உறவை இணையும் தருணத்தில் ஆராய்ந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈