👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 082 தீ நட்பு 📖 (Thee Natppu)
📖 (குறள் – 0811) 📖
📖 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
📖 பெருகலிற் குன்றல் இனிது.
🌻 உறவு பாராட்டுவார் என்றாலும் பண்பிலார் நட்பை
🌻 வளர்காமல் விலகிவிடுதலே இனிமையானது.
📖 (குறள் – 0812) 📖
📖 உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
📖 பெறினும் இழப்பினும் என்.
🌻 தேவை பொருட்டு உறவு பாராட்டும் ஏற்கமுடியாதவர் நட்பை
🌻 பெறுவதால் அல்லது இழப்பதால் எந்த பயனும் இல்லை.
📖 (குறள் – 0813) 📖
📖 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
📖 கொள்வாரும் கள்வரும் நேர்.
🌻 என்ன பயன் என்று சீர்தூக்கிப் பார்க்கும் நண்பரும்,
🌻 இலாப நோக்கில் செயல்படுபவரும், திருடரும் சமமானவர்களே.
📖 (குறள் – 0814) 📖
📖 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
📖 தமரின் தனிமை தலை.
🌻 போர்களத்தில் ஓட மறுக்கும் குதிரைப் போன்ற நட்பைவிட
🌻 தனிமை தலைச் சிறந்தது.
📖 (குறள் – 0815) 📖
📖 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
📖 எய்தலின் எய்தாமை நன்று.
🌻 நன்மை செய்து உறவு பராட்டாத அற்பமானவர்களின் வறுந்தக் கூடிய நட்பை
🌻 அடைவதைவிட விலகி இருப்பதே நன்று.
📖 (குறள் – 0816) 📖
📖 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
📖 ஏதின்மை கோடி உறும்.
🌻 சிந்தை தெளிவில்லாதவரிடம் நெருக்கமான நட்புக் கொள்வதை விட ஆய்ந்து அறிபவரிடம்
🌻 பகைமை பாராட்டுவது நிறைந்த நன்மை தரும்.
📖 (குறள் – 0817) 📖
📖 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
📖 பத்தடுத்த கோடி உறும்.
🌻 போலிச் சிரிப்புடன் பழகும் நட்பைவிட பகைவரால்
🌻 பல வகையில் நன்மை உண்டாகும்.
📖 (குறள் – 0818) 📖
📖 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
📖 சொல்லாடார் சோர விடல்.
🌻 நடக்கும் செயலை கெடுப்பவர் நட்பை
🌻 சொல்லிக் கொண்டு இருக்காமல் விட்டோழிக்க வேண்டும்.
📖 (குறள் – 0819) 📖
📖 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
📖 சொல்வேறு பட்டார் தொடர்பு.
🌻 கனவிலும் துன்பம் தராமல் இருக்குமோ?. செயலுக்கும்,
🌻 சொல்லுக்கும் தொடர்பு இல்லாதவர் தொடர்பு.
📖 (குறள் – 0820) 📖
📖 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
📖 மன்றில் பழிப்பார் தொடர்பு.
🌻 எல்லா வகையிலும் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்
🌻 நன்கு பழகி சபையில் பழிப்பவர் தொடர்பை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(082 – படைமாட்சி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
🌻 தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர்.
🌻 போலியான நண்பரைவிட உண்மையான பகைவர் சிறந்தவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈