👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 100 பண்புடைமை 📖 (Panbudaimai)
📖 (குறள் – 991) 📖
📖 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
📖 பண்புடைமை என்னும் வழக்கு.
🌻 எண்களைப் போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன் யாரிடமும் எளிமையாக பழுகுதலே
🌻 பண்புடைமை என்பது வழக்கு.
📖 (குறள் – 0992) 📖
📖 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
📖 பண்புடைமை என்னும் வழக்கு.
🌻 அன்பை உடமையாக கொள்ளல், சிந்திக்கத் தகுந்த பிறப்பாக வாழ்தல் என இவ்விரண்டும்
🌻 பண்புடைமை என்பது வழக்கு.
📖 (குறள் – 0993) 📖
📖 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
📖 பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
🌻 உடல் உறுப்புகள் ஒத்தபடி இருப்பதால் மக்களாக ஒப்புக்கொள்ளக்கூடாது. வெறுக்கத் தகுந்த
🌻 பண்புகளை வெறுக்க ஒத்திருத்தலே ஒப்பு.
📖 (குறள் – 0994) 📖
📖 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
📖 பண்புபா ராட்டும் உலகு.
🌻 இன்பம் தரும் ஒழுக்கமுடன் நன்றி செய்த பயனுடையார்
🌻 பண்பை உலகம் பாராட்டும்.
📖 (குறள் – 0995) 📖
📖 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
📖 பண்புள பாடறிவார் மாட்டு.
🌻 நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும்
🌻 பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.
📖 (குறள் – 0996) 📖
📖 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
📖 மண்புக்கு மாய்வது மன்.
🌻 பண்பாளர்களின் செயல்களால் பின்னியே உலகம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால்
🌻 மன்றாடுதலும் அர்த்தமற்று போகும்.
📖 (குறள் – 0997) 📖
📖 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
📖 மக்கட்பண்பு இல்லா தவர்.
🌻 கூர்மையான வெட்டும் கருவியைப் போன்ற ஆற்றல் உள்ளவர் என்றாலும்
🌻 மனிதாபிமானம் இல்லாதவர் மரம் போன்றவரே.
📖 (குறள் – 0998) 📖
📖 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
📖 பண்பாற்றார் ஆதல் கடை.
🌻 நட்பு பாராட்டாமல் நன்மையற்றதை செய்கிறார் என்பதற்காக
🌻 பண்பற்றுப் போவது இழிவானது.
📖 (குறள் – 0999) 📖
📖 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
📖 பகலும்பாற் பட்டன்று இருள்.
🌻 அடுத்தவருடன் ஒத்திசைவு அடைய வல்லவருக்கு அல்லாமல் மற்றவருக்கு இரண்டு கூறாக இருக்கும் இந்த உலகம்
🌻 பகல் பொழுதாக இருப்பினும் இருளாகவே இருக்கும்.
📖 (குறள் – 1000) 📖
📖 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
📖 கலந்தீமை யால்திரிந் தற்று.
🌻 பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பாலும்
🌻 அதனுடன் கலக்கும் தீமையால் திரிந்துவிடுதல் போன்று வீணாகிவிடும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(100 – பண்புடைமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 எளிமையாக எண்களைப் போன்ற வார்த்தைகளால் உறவாடுபவரே பண்பாளர்.
🌻 அவர் ஆன்ற குடியில் பிறந்து அன்போடு இருப்பார்.
🌻 உறுப்புகள் மட்டும் மனிதனாக மாற்றுவது இல்லை வெறுக்க தகுந்ததை செய்யாதவரே மனிதர்.
🌻 கத்தி போல் கூரிய அறிவு இருந்தும் மனித பண்பு இல்லாதவர் மரம் போன்றவர்.
🌻 பண்பாளர்கள் செயல்களே உலக இயக்கத்திற்கு காரணம்.
🌻 பண்பற்றவர் சேர்த்த பெருஞ்செல்வம் பாழே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈