👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 101 நன்றியில் செல்வம் 📖 (Nandriyin Selvam)
📖 (குறள் – 1001) 📖
📖 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
🌻 சொல்லமுடியா பெரும்பொருளை சேர்த்து வைத்தவர் அதை அனுபவிக்காமல்
🌻 இறந்துவிட்டார் என்றால் அப்பொருளால் பயன் இல்லை.
📖 (குறள் – 1002) 📖
📖 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
🌻 பொருளாள் எல்லாம் ஆகும் என்று யாருக்கும் கொடுக்காமல் இருக்கும் யாரும்
🌻 அருளற்ற மீளா பிறப்பு அடைவர்.
📖 (குறள் – 1003) 📖
📖 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
🌻 பொருள் ஈட்டுவதைக் கடந்தவற்றில் இசைவுக் கொள்ளாத ஆடவர்
🌻 தோற்றம் நிலத்திற்குப் பாரமானது.
📖 (குறள் – 1004) 📖
📖 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
🌻 மிச்சமாக இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும்
🌻 விரும்பப்படாதவன்.
📖 (குறள் – 1005) 📖
📖 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
🌻 கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து
🌻 செல்வம் கோடி உண்டாயினும் வீண்.
📖 (குறள் – 1006) 📖
📖 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
🌻 தன்குத் தானே கேடு செய்கிறான் பெருஞ்செல்வத்தை தானும் அனுபவிக்காமல் தகுதியானவற்கும்
🌻 கொடுக்காமல் ஈதல் இயல்பில்லாதவன்.
📖 (குறள் – 1007) 📖
📖 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
🌻 இல்லாதவற்கு கொடுத்து உதவாதவர் செல்வம் நல்லழகு
🌻 பெற்றவள் தனித்தே வாழ்ந்து முதுமை அடைந்தது போன்றது.
📖 (குறள் – 1008) 📖
📖 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
🌻 விரும்பி நாட வாய்ப்பளிக்காதவன் செல்வம் ஊர் நடுவே
🌻 நச்சு மரம் பழுத்ததைப் போன்றது. (எட்டி பழுத்தால் என்ன. ஈயாதான் வாழ்ந்தால் என்ன)
📖 (குறள் -1009) 📖
📖 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
🌻 அன்பில்லாமல் தன்னை வருத்தி அறம் பார்க்காமல் சேர்த்த
🌻 அனைத்து பொருளையும் அடுத்தவரே அனுபவிப்பார்.
📖 (குறள் – 1010) 📖
📖 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
🌻 சீர் பொருந்திய செல்வம் படைத்தவர் சிறு துன்பம் மழைக்காக
🌻 ஏற்படும் இருள் போன்று தோன்றி நன்மையாக மாறும் தன்மையுடையது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(101 – நன்றியில் செல்வம்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 சொல்லமுடியா பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன்?
🌻 அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார்.
🌻 பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே.
🌻 கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே.
🌻 பயனற்ற செல்வம் பழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது.
🌻 அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது.
🌻 சீரான செல்வருக்கு வரும் துன்பம் மாழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈