👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 026 புலால் மறுத்தல் 📖 (Pulal Maruththal)
📖 (குறள் – 0251) 📖
📖 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
📖 எங்ஙனம் ஆளும் அருள்.
🌻 தனது உடல் பெருகத்திற்க்காக மட்டும் அடுத்த உடலை உண்ணுபவன்,
🌻 எப்படி அருளால் ஆளப்படுவான்?.
📖 (குறள் – 0252) 📖
📖 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
📖 ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
🌻 பொருள்களை ஆளும் தன்மை அதை போற்றும் அறிவு இல்லாதார்க்கு இல்லை.
🌻 அருளால் ஆளப்படுவது அப்பொழுது இல்லை உடல் உன்னுபவருக்கு.
📖 (குறள் – 0253) 📖
📖 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
📖 உடல்சுவை உண்டார் மனம்.
🌻 படைகள் வைத்திருப்பவர் நெஞ்சம் போலவே,நல்லதை நினைக்காது
🌻 ஒன்றின் உடல் சுவையை விரும்புபவர் மனம்.
📖 (குறள் – 0254) 📖
📖 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
📖 பொருளல்ல தவ்வூன் தினல்.
🌻 அருள் அற்றது எது என்றால் உயிர்களை அழிக்காமல் இருப்பதே,
🌻 அழிப்பது பொருள் அற்றது அந்த உடல் உண்ணுவது.
📖 (குறள் – 0255) 📖
📖 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
📖 அண்ணாத்தல் செய்யாது அளறு.
🌻 உண்ணாமல் இருக்கும் தன்மையுள்ளது உயிரின் நிலை,
🌻 உடலை உண்ணுவதை செய்தால் வெளியேற்றுதல் செய்யாது நரகம்.
📖 (குறள் – 0256) 📖
📖 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
📖 விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
🌻 உண்ணுவதன் காரணமாக பறிக்காது உலகம் என்றால்,
🌻 எந்த மனிதரும் விலைக் கொடுத்து உண்ணுவது முடியாது.
📖 (குறள் – 0257) 📖
📖 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
📖 புண்ணது உணர்வார்ப் பெறின்.
🌻 உண்ணாது இருக்க வேண்டும் உடலை.
🌻 அடுத்த ஒன்றின் புண் அது என்ற உணர்வுப் பெற்றால்.
📖 (குறள் – 0258) 📖
📖 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
📖 உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
🌻 செயல்களில் தலைமைப் படுவதை விலகிப் பார்பவர்,
🌻 உன்னாமட்டார் உயிரின் தலை பிரிந்த உடலை.
📖 (குறள் – 0259) 📖
📖 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
📖 உயிர்செகுத் துண்ணாமை நன்று.
🌻 நெய் உற்றி ஆயிரம் வேள்வி செய்வதிலும்,
🌻 ஒன்றின் உயிரை அழித்து உண்ணாமை நல்லது.
📖 (குறள் – 0260) 📖
📖 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
📖 எல்லா உயிருந் தொழும்.
🌻 உயிர்களை கொல்லாதவரையும், புலன்களை மறுத்தவர்களையும்
🌻 எல்லா உயிரும் போற்றி வணங்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(026 -புலால் மறுத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு.
🌻 அருளை வளப்பதே அவசியம்.
🌻 உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும்.
🌻 பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும்.
🌻 உணவின் சுவை, படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது.
🌻 உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை.
🌻 உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள்.
🌻 புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
🌻 கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (027-தவம்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈