👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 047 தெரிந்து செயல் வகை 📖 (Therinthu Seyal Vagai)
📖 (குறள் – 0461) 📖
📖 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
📖 ஊதியமும் சூழ்ந்து செயல்.
🌻 எந்தமாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும்
🌻 ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
📖 (குறள் – 0462) 📖
📖 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
📖 அரும்பொருள் யாதொன்றும் இல்.
🌻 பழக்கமான கூட்டத்தில் தேவையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஆலோசித்து கூட்டாக செயல்படுபவருக்கு
🌻 அடையமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை.
📖 (குறள் – 0463) 📖
📖 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
📖 ஊக்கார் அறிவுடை யார்.
🌻 வரவை எண்ணி மூலப் பொருளை இழக்கும் செயலை செய்ய
🌻 தூண்ட மாட்டார் அறிவுடையவர்.
📖 (குறள் – 0464) 📖
📖 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
📖 ஏதப்பாடு அஞ்சு பவர்.
🌻 தீர்க்கமாக அறியமுடியா ஒன்றை செய்ய முற்படமாட்டார்கள் இகிழ்ச்சி
🌻 என்ற குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.
📖 (குறள் – 0465) 📖
📖 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
📖 பாத்திப் படுப்பதோ ராறு.
🌻 இன்னது இப்படி இருக்கவேண்டும் என்று வகைபடுத்தாமல் செயபடுதல் எதிரிகள்
🌻 நிரந்தரமாய் இருக்க வழி செய்துவிடும்.
📖 (குறள் – 0466) 📖
📖 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
📖 செய்யாமை யானுங் கெடும்.
🌻 செய்யதகாதவற்றை செய்வதால் கெடுதல் உண்டாகும் செய்யவேண்டியதைச்
🌻 செய்யாது இருப்பினும் கெடுதல் உண்டாகும்.
📖 (குறள் – 0467) 📖
📖 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
📖 எண்ணுவம் என்பது இழுக்கு.
🌻 என்னென்ன நேரிடும் என்பதை எண்ணி ஒரு செயலை துவங்க வேண்டும் துவங்கிய பின்பு
🌻 எண்ணலாம் என்பது இழக்கு.
📖 (குறள் – 0468) 📖
📖 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
📖 போற்றினும் பொத்துப் படும்.
🌻 நடைமுறைக்கு ஒத்துவராது என்று அறிந்தும் துவங்கினால் பலரால்
🌻 பாராட்டப் பட்டாலும் தடைப் பட்டுவிடும்.
📖 (குறள் – 0469) 📖
📖 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
📖 பண்பறிந் தாற்றாக் கடை.
🌻 நன்மை செய்தாலும் தவறு நடப்பதுண்டு ஒவ்வொரு தனிமனித
🌻 பண்பை அறியாமல் செய்யப்படுவதால்.
📖 (குறள் – 0470) 📖
📖 எள்ளாத எண்ணிய செயல் தம்மோடு
📖 கொள்ளாத உலகு.
🌻 பிறரால் இகழாதபடி சிந்தித்து செயல்பட வேண்டும் காரணம் தனக்கு
🌻 பொருத்தமற்றதை ஏற்காது உலகு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(047 – தெரிந்து செயல் வகை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வரவும் செலவும் வரும் ஆதாயமும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் .
🌻 பழகியவர்கள் இடத்திலேயே தேவையானவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது.
🌻 செயல்படும் முன் சிந்திக்க வேண்டும்.
🌻 செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு.
🌻 நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருந்ததே.
🌻 பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈