👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 048 வலி அறிதல் 📖 (vali Arithal)
📖 (குறள் – 0471) 📖
📖 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
📖 துணைவலியும் தூக்கிச் செயல்.
🌻 செயல்பட தேவைப்படும் ஆற்றல் தனக்கு இருக்கும் ஆற்றல் அடுத்தவரின் ஆற்றல் துணையாக அமையும் ஆற்றல்
🌻 இவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
📖 (குறள் – 0472) 📖
📖 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
📖 செல்வார்க்குச் செல்லாதது இல்.
🌻 செய்ய முடிந்ததை அறிந்து அதன்படி செயல்படுபவருக்கு
🌻 சாதிக்க முடியாதது இல்லை.
📖 (குறள் – 0473) 📖
📖 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
📖 இடைக்கண் முரிந்தார் பலர்.
🌻 உடைமையாக கொண்ட வலிமையை சரியாக அறியாமல் ஆர்வமுடன் ஆரம்பித்து
🌻 இடையிலேயே முடித்துக் கொண்டவர்கள் பலர்.
📖 (குறள் – 0474) 📖
📖 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
📖 வியந்தான் விரைந்து கெடும்.
🌻 வாய்த்த சுழலை அறிந்து நடக்காமல் தனது வலிமையின் அளவை அறியாமல்
🌻 ஆர்வப்பட்டவர்கள் விரைவில் அழிவார்கள்.
📖 (குறள் – 0475) 📖
📖 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
📖 சால மிகுத்துப் பெயின்.
🌻 மயில் இறகை போன்றதாலும் அச்சு முறியும்
🌻 அதுவே அளவில் மிகுந்தால்.
📖 (குறள் – 0476) 📖
📖 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
📖 உயிர்க்கிறுதி ஆகி விடும்.
🌻 நுனி மரத்திற்கு ஏறியவர் போல் தனது திறனை உயர்ந்ததாக மதிப்பிட்டவர் கிளை முறிந்து
🌻 உயிர் முடிவை கான்பதுப் போலவே முடிந்து விடுவார்.
📖 (குறள் – 0477) 📖
📖 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
📖 போற்றி வழங்கு நெறி.
🌻 வழிபடுத்தும் அளவை அறிந்து கொடுக்க வேண்டும் அதுவே பொருளைப்
🌻 போற்றி வழங்கும் நெறி.
📖 (குறள் – 0478) 📖
📖 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
📖 போகாறு அகலாக் கடை.
🌻 ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்பாடாது
🌻 செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.
📖 (குறள் – 0479) 📖
📖 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
📖 இல்லாகித் தோன்றாக் கெடும்.
🌻 எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்கை எல்லாம்
🌻 இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.
📖 (குறள் – 0480) 📖
📖 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
📖 வளவரை வல்லைக் கெடும்.
🌻 தன்னிடம் உள்ளதை ஆய்ந்து அறியாது முறைவைத்து கொடுப்பது
🌻 வளத்தை வலமாக கெடுக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(048 – வலி அறிதல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 செயலின் வலிமை, சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை, அறிந்து எது வேண்டாததோ அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை.
🌻 இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமானால் பாரம் கூடும்.
🌻 எனவை அளவறிந்து வாழ வேண்டும்.
🌻 வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும்.
🌻 தன்னிடம் உள்ளதை அறிந்து வாழ வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈