👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 109 தகையணங்குறுத்தல் 📖 (Thagaiyanguruththal)
📖 (குறள் – 1081) 📖
📖 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
📖 மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
🌻 தேவதைகள் விரும்பும் அழகிய மயிலோ பொன்னால் ஆன வடிவோ
🌻 பெண்களின் பால் ஈடுபாடு அடையும் என் நெஞ்சே.
📖 (குறள் – 1082) 📖
📖 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
📖 தானைக்கொண் டன்ன துடைத்து.
🌻 பார்த்தாள் நேருக்கு நேர் பார்க்க, தாக்க வந்த தேவதை
🌻 படை கொண்டு ஒன்றும் இல்லாதபடி செய்தது.
📖 (குறள் – 1083) 📖
📖 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
📖 பெண்டகையால் பேரமர்க் கட்டு.
🌻 முன்னர் அறியாமல் இருந்தேன் எமன் என்பதை இனி அறிந்தேன்
🌻 பெண் என்ற மீட்டேடுக்கும் திறன் கொண்டவளின் போர் தொடுக்கும் பார்வையால்.
📖 (குறள் – 1084) 📖
📖 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
📖 பேதைக்கு அமர்த்தன கண்.
🌻 பார்ப்பவரின் உயிரை உண்ணும் தோற்றமுடன் பெண்ணாகிய
🌻 பேதைக்கு அமர்ந்திருக்கின்றது கண்.
📖 (குறள் – 1085) 📖
📖 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
📖 நோக்கமிம் மூன்றும் உடைத்து.
🌻 அழிக்கும் எமனோ? வசியம் செய்யும் கண்ணோ? அடிமைப்படுத்தும் பிணையோ? கன்னியின்
🌻 நோக்கம் இம் முன்றும் இணைந்தே இருக்கிறது.
📖 (குறள் – 1086) 📖
📖 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
📖 செய்யல மன்இவள் கண்.
🌻 ஆசையைக் கொடுக்கும் புருவம் வளையாமல் நிமிர்ந்து கோடாக மறைத்தால் நடுக்கம்
🌻 இல்லாமல் செய்யும் இவள் கண்.
📖 (குறள் – 1087) 📖
📖 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
📖 படாஅ முலைமேல் துகில்.
🌻 கட்டுக்கு அடங்காத ஆண் யானை மேல் அணியப்பட்ட கட்படாம் போல் மாதர்க்கு
🌻 நிலைத்து நிற்காது முலைமேல் துகில்.
📖 (குறள் – 1088) 📖
📖 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
📖 நண்ணாரும் உட்குமென் பீடு.
🌻 பொருந்துவதற்காய் உடைந்ததே போர்களத்தில் எவரையும்
🌻 அஞ்சமடையச் செய்யும் என் வலிமை.
📖 (குறள் – 1089) 📖
📖 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
📖 அணியெவனோ ஏதில தந்து.
🌻 உடன் இசைந்தவரிடத்தில் குனிந்த பார்வையும் நாணமும் உடையவளுக்கு
🌻 அணிவதற்கு வேறு எதை தருவது.
📖 (குறள் – 1090) 📖
📖 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
📖 கண்டார் மகிழ்செய்தல் இன்று.
🌻 உண்டவர் இடத்தில் அல்லது மயக்கம் தராது போதைப் பொருள்கள் காமம் போல்
🌻 கண்டாலே மகிழச் செய்வது இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(109 – தகையணங்குறுத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது.
🌻 தேவதைகளால் விரும்பப்படும் மயிலாக என் நெஞ்சம் பெண்களால் கவரப்படுகிறதே!.
🌻 பார்வை ஒன்றே படை கொண்டு அழித்து ஒன்றுமற்றவனாய் என்னை தன்வசம் செய்ததே!.
🌻 உயிர் எடுக்கும் ஒருவன் இருப்பதை முன் அறியவில்லை அதை இவள் உணர்த்தினாள்!.
🌻 உயிர் உணர்த்தும் கண் உயிர் எடுக்கவும் செய்யும் பேதையாக இருந்தால்!.
🌻 எனவே அழிக்கும் எமனாக, அடிமைபடுத்தும் பிணையாக, வசப்படுத்தும் பொருளாக பெண்ணின் கண்கள் உள்ளன.
🌻 வளைந்த புருவம் வில்லாக என்னை தாக்காமல் இருக்குமோ?.
🌻 அடங்காத யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது!.
🌻 அவளோடு பொருத்துவதற்கு என்றே என் வலிமை குன்றியதோ?.
🌻 போதை ஏற்றும் பார்வையும், நாணமும் தவிர இவளுக்கு வேறு சிறந்த அணிகலன் தேவையில்லை.
🌻 இறைதாகம் அல்லது காமம் மட்டும் கண்டாலே போதை தரும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈