👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 108 கயமை 📖 (kayamai)
📖 (குறள் – 1071) 📖
📖 மக்களே போல்வர் கயவர் அவரன்ன
📖 ஒப்பாரி யாங்கண்ட தில்.
🌻 மனிதர்கள் போலவே இருப்பார்கள் கயவர்கள். அவர்களைப் போன்று
🌻 ஒன்றுப் பட்ட ஒன்றை நான் கண்டதில்லை.
📖 (குறள் – 1072) 📖
📖 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
📖 நெஞ்சத்து அவலம் இலர்.
🌻 நல்லன அறிந்தவர்களை விட கயவர்கள் உயர்வு உள்ளவர்கள் காரணம்
🌻 நெஞ்சத்தில் அவலம் இல்லாமல் இருப்பதால்.
📖 (குறள் – 1073) 📖
📖 தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
📖 மேவன செய்தொழுக லான்.
🌻 வாழ்வாங்கு வாழும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே கயவர்கள் காரணம்
🌻 விரும்பிய செயல்களை செய்து வாழ்வதால்.
📖 (குறள் – 1074) 📖
📖 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
📖 மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
🌻 வெளிப்பட்ட கயவரைக் காண்டு அவரைவிட நான்
🌻 மிகைப்பட்டவன் என்று இருமாப்புக் கொள்ளும் கீழ்.
📖 (குறள் – 1075) 📖
📖 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
📖 அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
🌻 அச்சமுடன் இருப்பதே கீழ் மக்களின் விடாது கடைபிடிக்கும் ஆசாரம்.
🌻 ஆசைப்பட்டால் எஞ்சிய சிறிது ஒழுக்கம் காணப்படும்.
📖 (குறள் – 1076) 📖
📖 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
📖 மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
🌻 அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட
🌻 மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.
📖 (குறள் – 1077) 📖
📖 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
📖 கூன்கையர் அல்லா தவர்க்கு.
🌻 ஈரக் கைகளைக் கூட உதராத கயவர்கள் மூக்கை உடைக்கும் வளைந்த கை உள்ளவர்களைத் தவிர
🌻 மற்றவர்களுக்கு கொடுத்து உதவமாட்டார்கள்.
📖 (குறள் – 1078) 📖
📖 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
📖 கொல்லப் பயன்படும் கீழ்.
🌻 உதாரணமாக சொல்வதற்கு பயன்படுபவர்கள் சான்றோர். கரும்பு போல்
🌻 கொல்லப் பயன்படுபவர்கள் கீழானவர்கள்.
📖 (குறள் – 1079) 📖
📖 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
📖 வடுக்காண வற்றாகும் கீழ்.
🌻 உடைகள் அணிவதையும் உணவுகள் உண்ணுவதையும் கண்டு அவர்களிடம்
🌻 குற்றம் காண முயல்வார்கள் கீழானவர்கள்.
📖 (குறள் – 1080) 📖
📖 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
📖 விற்றற்கு உரியர் விரைந்து.
🌻 எதற்கு உரியவர் கயவர் என்று உற்று நோக்க விலைக்கு தன்னை
🌻 அடிமையாக்கி கொள்ளவதில் விரைவாக செயல்படுகிறார்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(108 – கயமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள்.
🌻 நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள்.
🌻 கயவரை சிறந்தவன் என்பவன் கிழானவன்.
🌻 சான்றாக இருப்பார்கள் நல்வர்கள்.
🌻 கரும்பாக நசுக்கப்படும் கீழானவர்கள் அச்சத்தை ஆசாரமாக கொள்வர்.
🌻 நல்லாடை அணிவதையும் நற்சோறு உண்ணுவதையும் கண்டு குற்றம் காண நினைப்பவர் கீழானவர்கள்.
🌻 கயவர்கள் தங்களை விலைக்கு அடிமையாக இருப்பதை விரைந்து செய்வார்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈