👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 117 படர் மெலிந்து இரங்கல்📖 (Padar melinthu Irangal)
📖 (குறள் – 1161) 📖
📖 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
📖 ஊற்றுநீர் போல மிகும்.
🌻 மறைத்து விடலாம் என முயல்வேன் என் நோயை ஆனால் இறைக்க சுரக்கும்
🌻 ஊற்று நீர் போல் மிகுந்து விடுகிறது.
📖 (குறள் – 1162) 📖
📖 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
📖 உரைத்தலும் நாணுத் தரும்.
🌻 மறைத்து விடவழி இல்லை இந் நோயை நோய் உண்டாக்கியவர்க்கு
🌻 உரைப்பதும் வெட்கம் தரும்.
📖 (குறள் -1163) 📖
📖 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
📖 நோனா உடம்பின் அகத்து.
🌻 காமமும் நாணமும் என் மனதில் உயிர் என்ற காவரத் தண்டால் நிலைபெறுகிறது
🌻 வலி அற்ற உடம்பில் வலி உண்டாக்க.
📖 (குறள் – 1164) 📖
📖 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
📖 ஏமப் புணைமன்னும் இல்.
🌻 காமம் என்ற கடல் சூழும் நிலை உண்டாகும் அதை நீந்திக்
🌻 கடக்கும் கப்பல்தான் இல்லை.
📖 (குறள் – 1165) 📖
📖 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
📖 நட்பினுள் ஆற்று பவர்.
🌻 வெறுத்தால் என்ன செய்வாரோ?
🌻 நட்பாய் இருக்கும் பொழுதே வராமல் துன்பம் தருபவர்.
📖 (குறள் – 1166) 📖
📖 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
📖 துன்பம் அதனிற் பெரிது.
🌻 இன்பத்தை கடல் அளவு மாற்றும் காமத்திற்கு தடை உண்டானால் கடலை விட
🌻 துன்பம் பெரிதாகி விடும்.
📖 (குறள் – 1167) 📖
📖 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
📖 யாமத்தும் யானே உளேன்.
🌻 உடல் வேட்கையான காமம் என்ற பெரும் வெள்ளத்தினை நீந்திக் கரை காண முடியவில்லை
🌻 நள்ளிரவும் நான் தனித்திருக்கிறேன்.
📖 (குறள் – 1168) 📖
📖 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
📖 என்னல்லது இல்லை துணை.
🌻 வாழும் உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து இசைவு தந்த இரவே உனக்கு
🌻 என்னை அல்லாது வேறு துணை இல்லை.
📖 (குறள் – 1169) 📖
📖 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
📖 நெடிய கழியும் இரா.
🌻 கேடு செய்யும் கொடியவர்களை விட கொடுமையானது இந்நாள்
🌻 (துணையின்றி) நிண்ட நேரம் கடந்து கழியும் இரவு.
📖 (குறள் – 1170) 📖
📖 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
📖 நீந்தல மன்னோஎன் கண்.
🌻 உள்ளம் போலவே நினைக்கும் இடம் செல்ல முடியும் என்றால் கண்ணீர்
🌻 வெள்ளத்தில் மூழ்குமோ என் கண்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(116 – படர் மெலிந்து இரங்கல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பலர் பேசுவதால் காதல் வாழும் என ஆருயிர் அறிவது ஒரு பாக்கியம்.
🌻 இறை உணர்ந்தவன் என்பவனும் காதல் வசப்பட்டவன் என்பதால் உயிருக்கு இது இன்பம்.
🌻 மலர் போன்ற கண்ணின் அருமை அறியாமல் வதந்தி பேசும் இந்த ஊர்.
🌻 ஊரார் சொல்படி காதல் ஈடாகட்டும் அவர்களே காதலாகிய இறை பற்றை வளர்க்கும் தாய் போன்றவர்கள்.
🌻 மகிழ்ந்து இருக்க மது தேடுவது போல் காமம் தோன்ற இன்பம் உண்டாகிறது.
🌻 சும்மா ஒரு நாள் பார்த்ததற்கு கிராணம் போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
🌻 ஊரார் பேச்சி எருவாக அம்மாவின் பேச்சி நீராக காதல் பயிர் வளரந்தது.
🌻 நெய் கொண்டு நெருப்பை அணைப்பது போன்றது காதலை பழித்து அழிக்க நினைப்பது.
🌻 வதந்திக்கு முற்றாய் பிரிவதை தவிர்த்தார்.
🌻 இவ்வூர் மக்கள் வதந்தியால் என் காதலர் என்னை வந்தடைந்தார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈