👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 114 நாணுத் துறவு உரைத்தல் 📖 (Naanu thuravu uraithal)
📖 (குறள் – 1131) 📖
📖 காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
📖 மடலல்லது இல்லை வலி.
🌻 காமம் பழகி பின் ஒரு காரணத்தால் வருந்தும் ஒருவருக்கு பாதுகாப்பு பணிமுறை
🌻 முடங்கல் இன்றி வலி தீராது.
📖 (குறள் – 1132) 📖
📖 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
📖 நாணினை நீக்கி நிறுத்து.
🌻 தாங்கமுடியா காமத்தால் உடம்பும் உயிரும் அச்சப்பட வேண்டிய மடலேறும்
🌻 எனவே நாணத்தை விலக்கி வை.
📖 (குறள் -1133) 📖
📖 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
📖 காமுற்றார் ஏறும் மடல்.
🌻 நாணத்துடன் நல்ல ஆண்மையோடு முன்னர் இருந்தேன் இன்றோ காமத்தால்
🌻 காமுற்றவர் ஏறும் மடல் அடைந்தேன்.
📖 (குறள் – 1134) 📖
📖 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
📖 நல்லாண்மை என்னும் புணை.
🌻 காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன்
🌻 நல்ல ஆண்மை என்னும் தோணியை.
📖 (குறள் – 1135) 📖
📖 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
📖 மாலை உழக்கும் துயர்.
🌻 வளையல் அணிந்த விளையாட்டுப் பெண் தந்தாள் மடலொடு
🌻 மாலை நேரத்துத் துயரத்தையும் .
📖 (குறள் – 1136) 📖
📖 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
📖 படல்ஒல்லா பேதைக்கென் கண்.
🌻 மடலூர்தலை நள்ளிரவிலும் நினைக்கிறேன் காரணம் மாற்ற முடியாத
🌻 வேதனையை அடைந்தது இளம்பெண்ணாள் என் கண்.
📖 (குறள் – 1137) 📖
📖 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
📖 பெண்ணின் பெருந்தக்க தில்.
🌻 கடல் அளவு காமத்தில் ஆட்பட்டாலும் மடலேறாப்
🌻 பெண்ணின் பெருமை போன்று ஒன்று இல்லை.
📖 (குறள் – 1138) 📖
📖 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
📖 மறையிறந்து மன்று படும்.
🌻 நிறைவை அறியாதவர் மதிக்கத் தாகாதவர் என அறியாது காமம்
🌻 மறைக்க முடியாமல் வெளிப்படும்.
📖 (குறள் – 1139) 📖
📖 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
📖 மறுகின் மறுகும் மருண்டு.
🌻 எல்லாரும் அறியமுடியாது என்றே என் காமம்
🌻 மறைக்க முடியாமல் மறைந்திருப்பதாக சபலமடைகின்றது.
📖 (குறள் – 1140) 📖
📖 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
📖 யாம்பட்ட தாம்படா ஆறு.
🌻 நாம் கண்ணில் பார்க்கும் படியே நகைப்பர் அறிவல்லாதவர்
🌻 நாம் பட்டதை அவர்கள் படாதபடி மாற்று வழியில் நடப்பதால்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(114 – நாணுத் துறவு உரைத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 காமத்தின் வலி போக மடல் ஏறுதல் ஒருவகை தீர்வு தரும்.
🌻 இதை தவிர்க்க வெட்கத்தை விலக்கிடச் செய்யவேண்டும்.
🌻 நாணமும் நல்ல ஆண்மையும் காமத்தால் மடல் ஏறும்.
🌻 காமம் என்ற கொடிய வெள்ளம் நாணம் என்ற படகை கவிழ்த்துவிடும்.
🌻 மாலை நேரத்து துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள்.
🌻 எந்த வேலையும் செய்யமுடியாத மடல் அடைந்தேன் பேதை அவளை என் கண் கண்டதால்.
🌻 கடல் அளவு காமம் இருந்தாலும் மடல் அடைய பெண் பெருமைக்குரியவள்.
🌻 நிறைவு அடையாதவர் மதிக்கத் தகுந்தவர் இல்லை என்பதை அறியாமல் மறையாமல் காமம் வெளிப்படுகிறது.
🌻 நம் ஏக்கம் அறியாதவர் நம் கண்ணில் படும்படியே நகைப்பர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈