👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 113 காதல் சிறப்பு உரைத்தல் 📖 (kathal Sirappuuraiththal)
📖 (குறள் – 1121) 📖
📖 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
🌻 பால் உடன் தேன் கலந்ததைப் போன்றது பண்புடன் பேசும்
🌻 பற்களில் ஊறிய நிர்.
📖 (குறள் – 1122) 📖
📖 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
🌻 உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப்
🌻 பெண்ணுக்கும் எனக்கும் உள்ள நட்பு.
📖 (குறள் -1123) 📖
📖 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
🌻 கருமணியில் இருக்கும் பாவையே நீ போய்விடு கண்ணில் படும்
🌻 அழகிய நெற்றியுடைவள் இருக்க இல்லை இடம்.
📖 (குறள் – 1124) 📖
📖 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
🌻 வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல்
🌻 அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.
📖 (குறள் – 1125) 📖
📖 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
🌻 நினைப்பதில்லை நான் காரணம் மறப்பதை மறந்தும் அறியவில்லை
🌻 ஒளி பொருந்திய கண்ணாள் குணத்தை.
📖 (குறள் – 1126) 📖
📖 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
🌻 கண்களை மூடினாலும் மறைந்து போகமாட்டார் ஆகையால் இமைப்பதால் விலகமாட்டார்
🌻 அவ்வளவு நுட்பமானவர் என் காதலவர்.
📖 (குறள் – 1127) 📖
📖 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
🌻 கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை
🌻 எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.
📖 (குறள் – 1128) 📖
📖 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
🌻 நெஞ்சில் நிறைந்து என் காதலர் இருக்க சூடாக உண்ண
🌻 அஞ்சுகிறேன் வெப்பம் தாக்கும் என்பதை அறிந்து.
📖 (குறள் – 1129) 📖
📖 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.
🌻 இமைத்தால் மறைந்து விடுவார் என்று அறிந்து இமைக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக
🌻 அவரை அன்பற்றவர் என்னும் இவ்வூர்.
📖 (குறள் – 1130) 📖
📖 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
🌻 விருப்பமுடன் எனது உள்ளத்தில் என்றும் இருக்கிறார் பிரிந்து இகழ்ந்து இருக்கிறார்
🌻 என்று பழிக்கும் இவ்வூர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(113 – காதல் சிறப்பு உரைத்தல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 பாலில் தேன் கலந்தது போல் முத்தம் தித்திக்கும்.
🌻 உடலும் உயிரும் கலந்தது போல் கலந்த அவள் கண்மணியின் கருவிழியை கடந்து நெற்றியிலும் நிறைகிறாள்.
🌻 வாழ்தலுக்கான உயிராக இருந்து காக்கிறாள்.
🌻 அவளை மறக்கவே இல்லை எனவே நினப்பதும் இல்லை.
🌻 அவரோ கண்ணை விட்டு விலகுவது இல்லை,
🌻 மை கொண்டு மறைக்கவும் இயலவில்லை,
🌻 நெஞ்சில் நிலைப்பதால் வெப்பமான உணவு உட்கொள்ளவில்லை.
🌻 கண்ணையும் இமைக்காமல் அவரை காப்பதால் அன்பற்றவராக இந்த மனிதர்கள் அவரை நினைக்கிறார்கள்.
🌻 அவரோ என் உள்ளத்தில் நீங்காமல் இருக்கிறார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (114-நாணுத் துறவு உரைத்தல்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈