👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 079 நட்பு 📖 (Natppu)
📖 (குறள் – 0791) 📖
📖 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
📖 வினைக்கரிய யாவுள காப்பு.
🌻 நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை. அதுபோலவே,
🌻 செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.
📖 (குறள் – 0792) 📖
📖 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
📖 பின்னீர பேதையார் நட்பு.
🌻 நிறைவளர்க்கும் குணம் பொருந்தியவர் நட்பு நிறைமதியாய் வளரும், பின்பு தேய்வது போலவே
🌻 பேதையார் நட்பு தேயும்.
📖 (குறள் – 0793) 📖
📖 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
📖 பண்புடை யாளர் தொடர்பு.
🌻 படிக்கும் பொழுதெல்லாம் வளர்க்கும் நூலின் தன்மைப்போல் பழகும் பொழுதெல்லாம் வளர்க்கும்
🌻 பண்புடையவர்களின் தொடர்பு.
📖 (குறள் – 0794) 📖
📖 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
📖 மேற்செனறு இடித்தற் பொருட்டு.
🌻 மகிழ்வது மட்டுமே அவசியம் இல்லை. நட்டம்
🌻 அதிகமாகமல் இருக்க தட்டிக் கேட்பதே நட்புக்கு அவசியம்.
📖 (குறள் – 0795) 📖
📖 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
📖 நட்பாங் கிழமை தரும்.
🌻 பார்த்து பழகுதல் இல்லை என்றாலும் உணர்ச்சிதான்
🌻 நட்பை தொடரச் செய்யும்.
📖 (குறள் – 0796) 📖
📖 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
📖 அகநக நட்பது நட்பு.
🌻 முகம் மலர பழகும் நட்பு நட்பு இல்லை. நெஞ்சத்தே
🌻 உள்முகமாய் மலர பழகுவதே நட்பு.
📖 (குறள் – 0797) 📖
📖 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
📖 அல்லல் உழப்பதாம் நட்பு.
🌻 கெடுதலை தவிர்க்கச் செய்து நல்வழிப் படுத்தி கெட்ட காலங்களில்
🌻 துன்பம் துடைப்பதாம் நட்பு.
📖 (குறள் – 0798) 📖
📖 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
📖 இடுக்கண் களைவதாம் நட்பு.
🌻 உடை உடலில் இருந்து விலக்க அதை தடுத்து காக்கும் கை போல் நண்பரின்
🌻 துன்பம் கண்டு களைப்பதே நட்பு.
📖 (குறள் – 0799) 📖
📖 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
📖 ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
🌻 நட்பிற்கு சிறந்த இலக்கணம் எது என்றால் கேட்காமலேயே
🌻 தேவையறிந்து தாங்கும் தன்மையே.
📖 (குறள் – 0800) 📖
📖 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
📖 புனையினும் புல்லென்னும் நட்பு.
🌻 இவர் என்னைவிட சிறியவர், இவர் இப்படி ஒரு உறவுக்காரர் என்று
🌻 சொல்லும் பொழுது சிறுமைப்படும் நட்பு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(079 – நட்பு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 செயல்களில் அரியது நட்புடன் இருப்பது.
🌻 நிறைவானவர் நட்பு வளர்மதியாக வளர்ந்து நிறைவற்றவர் நட்பு தேய்ந்துவிடும்.
🌻 படிக்க இனிமையான புத்தகம் போன்றது இனிமையானவர் நட்பு.
🌻 கூடி மகிழமட்டும் இல்லாமல் குறைகளை எடுத்துக் காட்டி திருத்தவும் நட்பு அவசியம்.
🌻 உதவி கேட்காமலேயே தானாக முன்வந்து செயல்படும் நட்பே நட்பிற்கு இலக்கணம்.
🌻 தன்னை உயர்வாக காட்டும் நட்பு நிலைக்காது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈