👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 078 படைச் செருக்கு 📖 (Padaiserukku)
📖 (குறள் – 0771) 📖
📖 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
📖 முன்நின்று கல்நின் றவர்.
🌻 எந்தன் முன் நிற்காதீர், தோற்பீர். பலர் என்தன்
🌻 முன் நின்று நடுகல்லாய் நின்றுவிட்டனர்.
📖 (குறள் – 0772) 📖
📖 கான முயலெய்த அம்பினில் யானை
📖 பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
🌻 காட்டு முயலுக்கு எய்தும் அம்பை விட
🌻 பிழைத்துவிடும் யானைமேல் எய்தல் இனிது.
📖 (குறள் – 0773) 📖
📖 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
📖 ஊராண்மை மற்றதன் எஃகு.
🌻 சிறந்த ஆண்மை என்பது அடுத்தவர் துன்பம் துடைத்தல்,
🌻 அதிலும் பகைவருக்கு உதவுதல் மற்றுமோர் உயர்வு.
📖 (குறள் – 0774) 📖
📖 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
📖 மெய்வேல் பறியா நகும்.
🌻 வீரன் தனது கையில் இருந்த வேலை யானைமேல் பாய்ச்சிய பின்பு
🌻 அடுத்த வேல் தனது உடல் மேல் இருப்பதால் நகைத்துக் கொள்வான்.
📖 (குறள் – 0775) 📖
📖 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
📖 ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
🌻 கவனமாய் விரிந்த விழிகளின் இமைகள் தன்மீது எறிந்த வேல் கண்டும்
🌻 ஒட்டாது திடமான மனிதற்கு.
📖 (குறள் – 0776) 📖
📖 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
📖 வைக்கும்தன் நாளை எடுத்து.
🌻 வெற்றித் தழும்பு ஏற்படாத நாட்களை வீணாக கழித்த
🌻 நாட்களாக கணக்கிடுவார்கள் வீரர்கள்.
📖 (குறள் – 0777) 📖
📖 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
📖 கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
🌻 பரவும் புகழுக்காக உயிரையும் துறப்பவர்கள்,
🌻 காலின் அணிகலன்களை விலக்கிய நடனப்பெண் போன்றவர்கள்.
📖 (குறள் – 0778) 📖
📖 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
📖 செறினும் சீர்குன்றல் இலர்.
🌻 தேவை என்றால் உயிருக்கு அஞ்சாத மறவர் தன் அரசன்
🌻 தடுத்தாலும் சீர் குறைவது இல்லை.
📖 (குறள் – 0779) 📖
📖 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
📖 பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
🌻 சவாலை சாதிக்க தயங்கம் இல்லாமல் சாகக்கூடியவரை யார்
🌻 பிழைத்தார் என்று தண்டிப்பது.
📖 (குறள் – 0780) 📖
📖 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
📖 இரந்துகோள் தக்கது உடைத்து.
🌻 காப்பவர் கண்களில் நீர்மல்கச் செய்யும் மரணம் கண்டதால் அத்தகைய மரணம்
🌻 இரந்தாவது பெறும் தகுதியுடையதாகிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(078 – படைச் செருக்கு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 என் முன் நிற்காதே தோல்வி அடைவாய் என்ற செருக்குடைய படைவீரன் காட்டு முயலுக்கு அம்பு ஏய்துவதிலும் கொல்ல முடியா யானை மீது ஏய்தவே முற்படுவான்.
🌻 மரணமும் மதிப்பு மிகுந்தது என உணர்ந்தவனே எல்லாரலும் மதிக்கப்படுவான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (079-நட்பு) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈