👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 086 இகல் 📖 (Igal)
📖 (குறள் – 0851) 📖
📖 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
📖 பண்பின்மை பாரிக்கும் நோய்.
🌻 இகழ்ச்சி என்பது எல்லா உயிர்க்கும் அதனதன் இயல்பான பகலை
🌻 ஏற்காமல் மாற்ற முற்படும் நோய்.
📖 (குறள் – 0852) 📖
📖 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
📖 இன்னாசெய் யாமை தலை.
🌻 டுநிலைமை கருதி விலகிவிடுதல் செய்தாலும், இகழ்வை கருத்தில்கொண்டு
🌻 துன்பம்செய்யாமல் இருப்பதே முதன்மையானது.
📖 (குறள் – 0853) 📖
📖 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
📖 தாவில் விளக்கம் தரும்.
🌻 உள்ளபடியே ஏற்க முடியாத இகல் என்ற வரையறுக்க முடியாத நோய் நீங்கினால், வருத்தம் இல்லாது வரும்
🌻 மாற்றத்தால் தொளிவான விளக்கம் கிடைக்கும்.
📖 (குறள் – 0854) 📖
📖 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
📖 துன்பத்துள் துன்பங் கெடின்.
🌻 இன்பமும் மேலும் இன்பமும் உண்டாகும் துன்பமும் மேலும்
🌻 துன்பமும் உண்டாக்கும் பகையுணர்வு என்ற இகல் அழிந்தால்.
📖 (குறள் – 0855) 📖
📖 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
📖 மிக்லூக்கும் தன்மை யவர்.
🌻 பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்தில் வல்லவரை,
🌻 யார் வெல்லும் தன்மை கொண்டவர் ?.
📖 (குறள் – 0856) 📖
📖 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
📖 தவலும் கெடலும் நணித்து.
🌻 பகையுணர்வே மிக இனிமையானது என்பவன் வாழ்க்கை
🌻 எளிதில் கெட்டு அழியும்.
📖 (குறள் – 0857) 📖
📖 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
📖 இன்னா அறிவி னவர்.
🌻 பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர் .பகைக் கொள்பவர்
🌻 தீய அறிவுக் கொண்டவர்.
📖 (குறள் – 0858) 📖
📖 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
📖 மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
🌻 பகையுணர்வுக்கு எதிராக செயல்பட்டால் ஆக்கம் விளையும். பகையுணர்வை
🌻 மிகைப்படுத்தினால் கேடு உண்டாக்க ஊக்கம் விளையும்.
📖 (குறள் – 0859) 📖
📖 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
📖 மிகல்காணும் கேடு தரற்கு.
🌻 பகையுணர்வு அடையமாட்டார் முன்னேற்றம் வரும்பொழுது .பகையுணர்வை
🌻 அதிகம் அடைவார் கேடு உண்டாவதற்கு.
📖 (குறள் – 0860) 📖
📖 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
📖 நன்னயம் என்னும் செருக்கு.
🌻 பகையுணர்வால் துன்பமெல்லாம் வரும் என்பதால் அதை விலக்கிடும்
🌻 நன்மை என்ற செருக்கு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(086 – இகல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது.
🌻 நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல்கூடாது.
🌻 இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும்.
🌻 இன்பம் வளர்ந்து துன்பம் அழியும்.
🌻 பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது.
🌻 எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார்.
🌻 உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார்.
🌻 நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈