👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 087 பகைமாட்சி 📖 (Pagaimatchi)
📖 (குறள் – 0861) 📖
📖 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
📖 மெலியார்மேல் மேக பகை.
🌻 வலிமையானவர்கள் மேல் நெஞ்சை நிமிர்த்த விரும்பு. விரும்பாதே
🌻 மென்மையானவர்கள் மேல் வரும் பகையை.
📖 (குறள் – 0862) 📖
📖 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
📖 என்பரியும் ஏதிலான் துப்பு.
🌻 அன்பில்லாதவன், நெருங்கிய துணையில்லாதவன், சுயமாக சாதிக்க முடியாதவன்
🌻 என ஏதும் இல்லாதவன் பகை என்ன இலக்கு அடைய முடியும்?.
📖 (குறள் – 0863) 📖
📖 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
📖 தஞ்சம் எளியன் பகைக்கு.
🌻 அச்சம் என்பதை அறியாமல், அடக்கமுடன் இல்லாமல், கொடுக்கும் பண்பும் அற்று இருப்பவன்
🌻 பகைக்கு எளிமையாக தஞ்சமடைவான்.
📖 (குறள் – 0864) 📖
📖 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
📖 யாங்கணும் யார்க்கும் எளிது.
🌻 நீங்காத வெறுப்பும், நிறைவற்ற மனமும் உள்ளவனை, எக்காலத்திலும்
🌻 எவ்விடத்திலும் யார் வேண்டுமானலும் வெற்றிகொள்வது எளிது.
📖 (குறள் – 0865) 📖
📖 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
📖 பண்பிலன் பற்றார்க்கு இனிது.
🌻 தனக்கான பாதை அறியாமல், தனக்கு உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தாமல், பழிக்கு அஞ்சாமல்,
🌻 பண்பில்லாமல் இருப்பவனை தனக்கே எல்லாம் என்றிருப்பவன் வெற்றிகொள்வது எளிது.
📖 (குறள் – 0866) 📖
📖 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
📖 பேணாமை பேணப் படும்.
🌻 கண்டு அறியாமல் வெறுப்படைபவன், அழிவன மேல் அளவற்ற ஆசைகொள்பவன்
🌻 எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும்.
📖 (குறள் – 0867) 📖
📖 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
📖 மாணாத செய்வான் பகை.
🌻 எதையாவது கொடுத்து பெற வேண்டும் கூடி இருந்தே
🌻 கூடாதன செய்வான் பகையை.
📖 (குறள் – 0868) 📖
📖 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
📖 இனனிலனாம் ஏமாப் புடைத்து.
🌻 குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல செய்பவன் பகைவர்க்கு
🌻 கடினமில்லா வெற்றியை தருவான்.
📖 (குறள் – 0869) 📖
📖 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
📖 அஞ்சும் பகைவர்ப் பெறின்.
🌻 பகையுணர்வு உள்ளவருக்கு பிரிக்கமுடியாத இன்பம் அறிவில்லாத
🌻 அஞ்சும் பகைவர் பெற்றுவிட்டால்.
📖 (குறள் – 0870) 📖
📖 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
📖 ஒல்லானை ஒல்லா தொளி.
🌻 கற்று அறியாதவன் வெறுக்கும் சிறுபொருள் எக்காலத்திலும்
🌻 உடன்பாடதவனை கூட்டத்துடன் உடன்படுத்தாது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(087 – பகைமாட்சி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 வலிமையை எதிர்த்து மென்மையை தவிர்ப்பது பகைக்கு சிறப்பு.
🌻 அன்பும், நல்ல துணையும், சுய சிந்தனையும் இல்லாதவன் பகை வீண்.
🌻 அச்சமும், அமைதியும், கொடுக்கும் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு எளிமையானவன்.
🌻 அறியாமலேயே வெறுப்பும், பேராசையும் உள்ளவனை பகையாக கொள்ள வேண்டும்.
🌻 கூடி இருந்தே அழிக்க நினைப்பவனை பகைமை பாராட்ட வேண்டும்.
🌻 பகை உணர்வு உள்ளவனுக்கு இன்பம் அறிவற்று அஞ்சும் ஒருவரே.
🌻 கல்லாதவன் யாருடனும் கூடி இருக்கும் தகுதியற்றவன்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈