👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 089 உட்பகை 📖 (Utpagai)
📖 (குறள் – 0881) 📖
📖 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
📖 இன்னாவாம் இன்னா செயின்.
🌻 இருப்பிடத்தின் தன்மையும் துன்பத்தை போக்காமல் துன்பம் தரும். அதுபோல் உயர்ந்த சுற்றத்தாரின் தன்மையும்
🌻 துன்பமானதே துன்பமானதை செய்தால்.
📖 (குறள் – 0882) 📖
📖 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
📖 கேள்போல் பகைவர் தொடர்பு.
🌻 வாள் போல் நேரடியாய் வெட்டி விழ்த்தும் பகைவருக்கு அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டும்
🌻 நட்புடன் உறவாடும் பகைவருக்கு.
📖 (குறள் – 0883) 📖
📖 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
📖 மட்பகையின் மாணத் தெறும்.
🌻 உட்பகைக்கு அஞ்சி தன்னை காத்தால் வேண்டும். அது சுடாத
🌻 மண் பானையில் உலை வைத்தல் போன்றது.
📖 (குறள் – 0884) 📖
📖 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
📖 ஏதம் பலவும் தரும்.
🌻 மனதிற்கு தேவையற்ற உட்பகை தோன்றினால் இனத்திற்கு
🌻 தேவையற்ற துன்பங்கள் பல வரும்.
📖 (குறள் – 0885) 📖
📖 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
📖 ஏதம் பலவும் தரும்.
🌻 உறவுமுறைக்குள் உட்பகை தேன்றினால் உறவுமுறை அற்றவர்களுக்கும்
🌻 தேவையற்ற துன்பங்கள் பல வரும்.
📖 (குறள் – 0886) 📖
📖 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
📖 பொன்றாமை ஒன்றல் அரிது.
🌻 தனி வேறு சிந்தை உள்ளவர்கள் கூடி இருக்க அடுத்தவரின் சதியால் பிரிந்தால் எக்காலத்திலும்
🌻 சிறப்புற கூடி இருப்பது அரிது.
📖 (குறள் – 0887) 📖
📖 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
📖 உட்பகை உற்ற குடி.
🌻 இரு வேறு உலோகத்தையும் இணைக்கும் செம்பு போல் கூடி உறவாடினாலும் கூட முடியாது
🌻 குடும்பத்திற்குள் உட்பகை ஏற்பட்டால்.
📖 (குறள் – 0888) 📖
📖 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
📖 உட்பகை உற்ற குடி.
🌻 அரத்தால் தேய்க்க எதிர்க இயலாது தேயும் தங்கம் போல்
🌻 உட்பகையின் வலிமையால் குடும்ப உறவும் தேயும்.
📖 (குறள் – 0889) 📖
📖 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
📖 உட்பகை உள்ளதாங் கேடு.
🌻 உட்பகை எள்ளளவே சிறுமையான தானலும்
🌻 உள்ளதற்கு எல்லாம் கேடு உண்டாக்கும்.
📖 (குறள் – 0890) 📖
📖 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
📖 பாம்போடு உடனுறைந் தற்று.
🌻 முழு சம்மதம் இல்லாதவர் வாழ்க்கை இருண்ட குகைக்குள் கொடிய
🌻 பாம்புடன் இருப்பதைப் போன்றது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(089 – உட்பகை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 இன்பம் தராத உறவுகளும் உண்டு.
🌻 அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள்.
🌻 உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது.
🌻 உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு.
🌻 உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈