👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 034 நிலையாமை 📖 (Nilaiyamai)
📖 (குறள் – 0331) 📖
📖 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
📖 புல்லறி வாண்மை கடை.
🌻 நிலையில்லாதவற்றை நிலையது என்று உணர்வது
🌻 அறிவற்றவர்களின் ஆணவச் செயல்.
📖 (குறள் – 0332) 📖
📖 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
📖 போக்கும் அதுவிளிந் தற்று.
🌻 கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம்
🌻 அது களைவது போலவே கலைந்தும் போகும்.
📖 (குறள் – 0333) 📖
📖 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
📖 அற்குப ஆங்கே செயல்.
🌻 நிலைக்காத இயல்புடைய செல்வத்தை அடைந்துவிட்டால்
🌻 அதைக்கொண்டு நிலையானதை செய்யவேண்டும்.
📖 (குறள் – 0334) 📖
📖 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
📖 வாளது உணர்வார்ப் பெறின்.
🌻 ஒரு நாள் என்று காட்டப்படுவது உயிர் என்ற மரத்தை அறுக்கும்
🌻 வாள் என்று உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.
📖 (குறள் – 0335) 📖
📖 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
📖 மேற்சென்று செய்யப் படும்.
🌻 நாக்கு விக்குளால் அடைபடுவதற்கு முன் (மரணத்திற்கு முன்) நல்ல செயல்களை
🌻 விரும்பி செய்திடல் வேண்டும்.
📖 (குறள் – 0336) 📖
📖 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
📖 பெருமை உடைத்துஇவ் வுலகு.
🌻 நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் இன்று இல்லை என்ற
🌻 பெருமை படைத்தது இந்த உலகம்.
📖 (குறள் – 0337) 📖
📖 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
📖 கோடியும் அல்ல பல.
🌻 சிறிது நேரம் கூட வாழ்வதை தெரிந்துக் கொள்ளாதவர் நினைக்கும்
🌻 கோடியும் தேவையற்ற பலவே.
📖 (குறள் – 0338) 📖
📖 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
📖 உடம்பொடு உயிரிடை நட்பு.
🌻 ஓட்டை பிரிந்து தனியே பறந்துவிடும் பறவைப் போலவே
🌻 உடம்புடன் உயிர் கொண்ட நட்பு.
📖 (குறள் – 0339) 📖
📖 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
📖 விழிப்பது போலும் பிறப்பு.
🌻 தூங்கிவிடுவதுப் போன்றது மரணம் தூங்கி பின்பு
🌻 விழிப்பதுப் போன்றது பிறப்பு.
📖 (குறள் – 0340) 📖
📖 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
📖 துச்சில் இருந்த உயிர்க்கு.
🌻 புகலிடம் அமையாமல் அலைகிறதோ ? உடம்பில்
🌻 சிலகாலம் இருக்கும் உயிர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(034 – நிலையாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 நிலையற்றதை நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கிழானவர்களே.
🌻 சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும்.
🌻 கூத்டாட்டு மைதானத்தின் நிகழ்கவே செல்வத்தின் நிலை.
🌻 உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும்.
🌻 எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன்.
🌻 மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது.
🌻 ஏதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
👉 (035-துறவு) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈