திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 075 அரண் 📖 (Aran)
📖 (குறள் – 0741) 📖
📖 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
📖 போற்று பவர்க்கும் பொருள்.
🌻 வழிநடத்துபவருக்கு கோட்டையே சிறந்த பொருள். அச்சத்தை
🌻 போற்றுபவருக்கும் அதுவே பொருள்.
📖 (குறள் – 0742) 📖
📖 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
📖 காடும் உடைய தரண்.
🌻 பாதுகாக்கப் பட்ட நீரும், வளமான மண்ணும், குளிர் நிறைந்த
🌻 காடும் உள்ளடக்கியதே அரண்.
📖 (குறள் – 0743) 📖
📖 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
📖 அமைவரண் என்றுரைக்கும் நூல்.
🌻 உயர்வு, அகலம், திடம், அனைத்து தேவைகள பூர்த்தியாக்கும் அருமை, என நான்கும்
🌻 அமையப்படுவதே அரண் என்று எடுத்துரைக்கும் அரணுக்கான நூல்.
📖 (குறள் – 0744) 📖
📖 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
📖 ஊக்கம் அழிப்ப தரண்.
🌻 சிறுமை ஏற்படும் காலத்தில் பாதுகாக்கும் பெரிய இடமாகவும், பகை கொண்டவர்களின்
🌻 ஊக்கத்தை அழிப்பதாகவும் இருப்பதே அரண்.
📖 (குறள் – 0745) 📖
📖 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
📖 நிலைக்கெளிதாம் நீரது அரண்.
🌻 நீரால் செய்யப்பட்டாலும் அந்நீரை எளிதாக எற்காத கூழ் போல் தனது அகத்தே
🌻 இருப்பவருக்கு எளிதாக இருப்பதே அரண்.
📖 (குறள் – 0746) 📖
📖 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
📖 நல்லாள் உடையது அரண்.
🌻 தேவைகளை தீர்க்கும் எல்லா பொருளும் உள்ளடக்கியதாகவும்,
🌻 நல்ல ஆட்களை கொண்டதாகவும் இருப்பது அரண்.
📖 (குறள் – 0747) 📖
📖 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
📖 பற்றற் கரியது அரண்.
🌻 முழுவதையும் வளைத்தோ, முழுவதையும் வளைக்காமல் அறிந்தோ, சுழ்ச்சியால் பிரிவுபடுத்தியோ
🌻 கைப்பற்ற கடினமாக இருப்பது அரண்.
📖 (குறள் – 0748) 📖
📖 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
📖 பற்றியார் வெல்வது அரண்.
🌻 முழுமையான பலன் தந்து, அண்டிய யாவருக்கும் அடைக்கலம் தந்து,
🌻 கைப்பற்றயவரை வெற்றிக்கொள்வது அரண்.
📖 (குறள் – 0749) 📖
📖 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
📖 வீறெய்தி மாண்ட தரண்.
🌻 கைப்பற்ற முனையும் மாற்றாரை வாசலிலே அழித்து, செயல்படுதலில்
🌻 வெற்றியே இலக்காக கொண்டு ஆள்வது அரண்.
📖 (குறள் – 0750) 📖
📖 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
📖 இல்லார்கண் இல்லது அரண்.
🌻 எவ்வளவு சிறப்புப் பெற்றதாக இருப்பினும் செயல் திறன்
🌻 இல்லாதவர் இடத்தில் பயன் அற்றதாகும் அரண்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(075 – அரண்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 ஆள்பவருக்கும் அஞ்சுபவருக்கும் அவசியமான அரண்.
🌻 நன்நீரும் வளமான மண்ணும் நிழல்நிறை காடும் மலையும் அடக்கியதாக இருக்கும்.
🌻 பகைவரை தடுக்கவும் உள்ளவரை பாதுகாக்கவும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும்.
🌻 எவ்வளவு சிறப்பு பெற்ற அரணாக இருப்பினும் செயல்திறன் அற்ற ஆட்சியாளர் அமைந்தால் அரண் பயனற்றதாகிவிடும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈