(074 – நாடு ) – திருக்குறள்
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 074 நாடு 📖 (Naadu)
📖 (குறள் – 0731) 📖
📖 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
📖 செல்வரும் சேர்வது நாடு.
🌻 வெறுக்க முடியாதன விளைவதும், தகுதியான மக்களும், குறையாத
🌻 செல்வம் பெற்றவரும் கூடி இருப்பது நாடு.
📖 (குறள் – 0732) 📖
📖 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
📖 ஆற்ற விளைவது நாடு.
🌻 நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால்
🌻 தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.
📖 (குறள் – 0733) 📖
📖 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
📖 இறையொருங்கு நேர்வது நாடு.
🌻 சுமை பெருகி அதிகரிக்கும் தருணம் உதவி செய்வதால்
🌻 ஆட்சியாளர்களுக்கு ஏற்றம் எற்படுவதே நாடு.
📖 (குறள் – 0734) 📖
📖 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
📖 சேரா தியல்வது நாடு.
🌻 தீர்க்க முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும்
🌻 சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.
📖 (குறள் – 0735) 📖
📖 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
📖 கொல்குறும்பும் இல்லத நாடு.
🌻 பலதரப்பட்ட கூட்டங்களாகவும், விழ்ச்சிக்கு வழி வகுக்கும் உட்பகையும்,
🌻 அரசுக்கு எதிரான கொலைக்கு அஞ்சாத திவிரவாதிகளும் இல்லாமல் இருப்பது நாடு.
📖 (குறள் – 0736) 📖
📖 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
📖 நாடென்ப நாட்டின் தலை.
🌻 கெடுதலே அறியாமல் மீறி கேடு வரும் நேரத்தில் தனது வளத்தை இழக்காமல் இருக்கும் நாடே
🌻 நாடுகளுக்கெல்லாம் தலைசிறந்தது.
📖 (குறள் – 0737) 📖
📖 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
📖 வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
🌻 ஆற்று நீரும், ஊற்று நீரும். அதை வாய்க்க செய்யும் மலையும், பருவத்தே வரும் மழை நீரும்,
🌻 வல்லமையான அரணும் நாட்டின் அவசியமான உறுப்புகள்.
📖 (குறள் – 0738) 📖
📖 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
📖 அணியென்ப நாட்டிவ் வைந்து.
🌻 நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை
🌻 இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள்.
📖 (குறள் – 0739) 📖
📖 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
📖 நாட வளந்தரு நாடு.
🌻 நாடு என்பது முயற்சி இல்லாமலேயே வளம்பல பெற்றிருக்க வேண்டும்.
🌻 முயற்சியால் வளம் தருவது நாடாகாது.
📖 (குறள் – 0740) 📖
📖 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
📖 வேந்தமை வில்லாத நாடு.
🌻 இயற்கை வளம் நிறைந்திருந்தாலும்
🌻 பயனற்றுப் போகும் நல்லாட்சி இல்லாத நாடு.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(074 – நாடு) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 தேவையற்றது விளையாமல் தகுதியவர்கள் கூடி இருப்பதும், பசி, பிணி, பகை, இல்லாமல் இருப்பதும் நாடு.
🌻 ஊற்று நீரும், மழை நீரும், மலை அருவியும், அரனும் நாட்டிற்கு உறுப்புகள்.
🌻 எல்லாம் இருந்தும் நல்ல ஆட்சியாளர் இல்லை என்றால் பயன் இருக்காது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : July 2025
Next Post
👉 (075-அரண்) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈