(073 – அவை அஞ்சாமை ) – திருக்குறள்
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 073 அவை அஞ்சாமை 📖 (Avai Anjamai)
📖 (குறள் – 0721) 📖
📖 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
📖 தொகையறிந்த தூய்மை யவர்.
🌻 பேச்சின் வகைகளை அறிந்த வல்லவர், பேச தயங்கமாட்டார்.
🌻 கூட்டத்தின் தேவை தெளிவாய் தெரிவதால்.
📖 (குறள் – 0722) 📖
📖 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
📖 கற்ற செலச்சொல்லு வார்.
🌻 கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன்
🌻 மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.
📖 (குறள் – 0723) 📖
📖 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
📖 அவையகத்து அஞ்சா தவர்.
🌻 பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம்.
🌻 அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.
📖 (குறள் – 0724) 📖
📖 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
📖 மிக்காருள் மிக்க கொளல்.
🌻 கற்றவர்கள் முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி
🌻 தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.
📖 (குறள் – 0725) 📖
📖 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
📖 மாற்றங் கொடுத்தற் பொருட்டு
🌻 எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும்.
🌻 அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.
📖 (குறள் – 0726) 📖
📖 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
📖 நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
🌻 வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு,
🌻 நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.
📖 (குறள் – 0727) 📖
📖 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
📖 அஞ்சு மவன்கற்ற நூல்.
🌻 போர்களத்தில் கேழையின் கூர்மையானவாள் எப்படி பயனற்றதோ
🌻 அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.
📖 (குறள் – 0728) 📖
📖 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
📖 நன்கு செலச்சொல்லா தார்.
🌻 பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை
🌻 நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.
📖 (குறள் – 0729) 📖
📖 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
📖 நல்லா ரவையஞ்சு வார்.
🌻 கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள்
🌻 கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.
📖 (குறள் – 0730) 📖
📖 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
📖 கற்ற செலச்சொல்லா தார்.
🌻 அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள்,
🌻 அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(073 – அவை அஞ்சாமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 கூட்டத்தின் தேவை அறிந்து கற்றவர் முன்னும் அஞ்சாமல் பேச வேண்டும்.
🌻 போருக்கு போகும் துணிவை விட அவையில் பேசுவது கடினம்.
🌻 அறிவு பெற்றும் தக்க இடத்தில் பேசதாவர் அறிவற்றவரே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : July 2025
Next Post
👉 (074-நாடு) 👈
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈