👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 084 பேதமை 📖 (Pethamai)
📖 (குறள் – 0831) 📖
📖 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
🌻 மடமை என்பது என்ன என்றால் சிறு துன்பத்துக்கு அஞ்சி
🌻 நற்பயனை நழுவ விடுவது.
📖 (குறள் – 0832) 📖
📖 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
🌻 மடமையானவற்றில் முதன்மையானது தனக்கு
🌻 பொருந்தாத செயல்களை செய்ய விரும்புவது.
📖 (குறள் – 0833) 📖
📖 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
🌻 வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த
🌻 ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும்.
📖 (குறள் – 0834) 📖
📖 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
🌻 புரிந்துக் கொள்ளும் அளவிற்கு படித்து நன்கு உணர்ந்து பிறருக்கு எடுத்துரைத்து அதன்படி நடக்காத
🌻 பேதையைப் போல் வேறோரு பேதை இல்லை.
📖 (குறள் – 0835) 📖
📖 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
🌻 பேதையின் தன்னிச்சையான ஒரு செயல் அடுத்தடுத்து
🌻 துன்ப நரகத்தில் அழுத்தும்.
📖 (குறள் – 0836) 📖
📖 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
🌻 அர்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்?, நுட்பம் அறியாத
🌻 பேதை செயல்பட மேற்கொண்டால்.
குறிப்பு : பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது.
📖 (குறள் – 0837) 📖
📖 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
🌻 தொடர்பற்றவர்கள் பயனடைவார்கள் உறவினர்கள் பசித்திருப்பார்கள் பேதைக்கு
🌻 பெருஞ் செல்வம் வாய்ப்பதால்.
📖 (குறள் – 0838) 📖
📖 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
🌻 பித்து பிடித்த ஒருவன் கள் உண்டதைப் போல், பேதை தனக்கு
🌻 உடமையாக ஒன்றை பெற்றால் மாறிடுவான்.
📖 (குறள் – 0839) 📖
📖 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
🌻 பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு காரணம் அவர்களின் பிரிவு
🌻 துன்பம் ஒன்றும் தராது.
📖 (குறள் – 0840) 📖
📖 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
🌻 கழுவாத கால்களுடன் படுக்கைக்குச் செல்வதைப் போன்றது சான்றோர்
🌻 கூட்டத்திற்குப் பேதைச் செல்வது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(084 – பேதமை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அடைய வேண்டியதை அலட்சியத்தால் தவறவிடுவது பேதைமை.
🌻 தனக்கு பொருந்தாததை செய்வதே பேதைமையில் முதன்மை.
🌻 வெட்கப்படுதல், வேட்கையுடன் தேடல், இனிமையாக இருத்தல், பாதுகாத்தல் என இப்பண்புகள் இல்லாததே பேதைமை.
🌻 பேதைகளின் பிரிவு துன்பம் தராது.
🌻 கழுவாத கால்களுடன் படுக்க போவதைப் போன்றது அறிஞர் கூட்டத்திற்கு பேதை போவது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈