👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 131 புலவி 📖 (Pulavi)
📖 (குறள் – 1301) 📖
📖 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
📖 அல்லல்நோய் காண்கம் சிறிது.
🌻 தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும்
🌻 துன்ப நோய் காணலாம் சிறிது.
📖 (குறள் – 1302) 📖
📖 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
📖 மிக்கற்றால் நீள விடல்.
🌻 உப்பைப் போல் பயன்படுத்த வேண்டும் பிணகுதலை அது சிறிதளவும்
🌻 நீள விடக்கூடாது.
📖 (குறள் -1303) 📖
📖 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
📖 புலந்தாரைப் புல்லா விடல்.
🌻 பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை
🌻 கூடியவரை கூடவிடாமல் செய்வது.
📖 (குறள் – 1304) 📖
📖 ஊடி யவரை உணராமை வாடிய
📖 வள்ளி முதலரிந் தற்று.
🌻 சிறுபிணக்கு கொண்டவரை உணராமல் இருப்பது வாடிய
🌻 கொடியை வேருடன் அறுப்பது போன்றது.
📖 (குறள் – 1305) 📖
📖 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
📖 பூஅன்ன கண்ணார் அகத்து.
🌻 நலமானதை அணிகலன்களாக கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது பூ போன்ற
🌻 கண்களை உடையவளின் அகத்தே ஊடல் கொள்வது.
📖 (குறள் – 1306) 📖
📖 துனியும் புலவியும் இல்லாயின் காமம்
📖 கனியும் கருக்காயும் அற்று.
🌻 துன்பமும் சிறு பிணக்கும் இல்லாத காமம்
🌻 பழமும் காயும் இல்லாமல் வளமற்றதாகி விடும்.
📖 (குறள் – 1307) 📖
📖 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
📖 நீடுவ தன்றுகொல் என்று.
🌻 சிறு பிணக்கால் துன்பம் உண்டு என்றால் அது கூடி மகழும்
🌻 காலத்தை குறைத்து விடுமோ என்பதே.
📖 (குறள் – 1308) 📖
📖 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
📖 காதலர் இல்லா வழி.
🌻 வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா
🌻 காதலரை மாற்றிட இல்லை வழி.
📖 (குறள் – 1309) 📖
📖 நீரும் நிழலது இனிதே புலவியும்
📖 வீழுநர் கண்ணே இனிது.
🌻 நீரும் நிழல் படும் இடத்தில் இனிதாக இருக்கும் .சிறு பிணக்கும்
🌻 விருப்பமானவர் என்றால் இனிதாக இருக்கும்.
📖 (குறள் – 1310) 📖
📖 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
📖 கூடுவேம் என்பது அவா.
🌻 ஊடலை மாற்றி கூட முயலாதவருடன் என்நெஞ்சம்
🌻 கூடிடுவோம் என்பது அதன் அளவற்ற ஆசையே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(131 – புலவி) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 புணராது இருந்து அதன் வேதனை அறியலாம் சிறிது.
🌻 உப்பு போல் அளவாக அனுமதிக்கலாம் பிணக்கை.
🌻 பிணக்கு அளவுக்கு அதிகமானால் புணர்தல் நிகழாது.
🌻 ஊடலை உணராமல் இருந்தால் வேறுடன் பிடிக்கிய செடி போல் ஆகிவிடும்.
🌻 அடுத்தவர் நலத்தை விரும்பும் மலர்ந்த கண் உடையவர் ஊடல் அகத்தே மட்டுமே வெளிப்பட்டு மறையும்.
🌻 பிரிவும் ஊடலும் இல்லாத காமம் காயும் கனியும் இல்லாததைப் போன்றது.
🌻 ஊடலுக்கு தடுப்பாக அமைவது கூடுவது குறையும் என்ற நினைப்பு.
🌻 வருத்தமடைய யார் காரணம் என்று அறியாம காதலரை மாற்றும் வழி இல்லை.
🌻 நிழலில் இருக்கும் நீர் போல் விருப்பமானவர்களின் பிணக்கும் இருக்கும்.
🌻 ஊடலை மாற்ற அறியாதவரை கூடி மகிழ்வோம் என்பது அளவற்ற என் ஆசை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈