👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 045 பெரியாரைத் துணைக்கோடல் 📖 (Periyarai Thunaikodal)
📖 (குறள் – 0441) 📖
📖 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
📖 திறனறிந்து தேர்ந்து கொளல்.
🌻 அறம் எனப்படும் வாழும் முறை அறிந்து முன் அனுபவம் பெற்ற சிறந்த அறிவுடையாரின் உறவை
🌻 அவரின் திறன் அறிந்து விரும்பி ஏற்க வேண்டும்.
📖 (குறள் – 0442) 📖
📖 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
📖 பெற்றியார்ப் பேணிக் கொளல்.
🌻 வந்த துன்பம் விலக்கி அழிவை வருமுன் காக்கும்
🌻 பெருமைப் பெற்றவரை விரும்பி ஏற்க வேண்டும்.
📖 (குறள் – 0443) 📖
📖 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
📖 பேணித் தமராக் கொளல்.
🌻 அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை
🌻 மதித்துக் காத்து உறவுக் கொண்டாடுவது.
📖 (குறள் – 0444) 📖
📖 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
📖 வன்மையு ளெல்லாந் தலை.
🌻 தன்னை விட பெரியவர்களிடம் உறவுப் பாராட்டி வாழ்வது
🌻 வலிமையானவைகளில் எல்லாம் முதன்மையானது.
📖 (குறள் – 0445) 📖
📖 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
📖 சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
🌻 விரும்பத்தகவரின் கண்ணாக வாழ விரும்பும் மன்னவன்
🌻 விரும்பத்தக்கவரை அருகில் வைத்துகொள்ள வேண்டும்.
📖 (குறள் – 0446) 📖
📖 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
📖 செற்றார் செயக்கிடந்த தில்.
🌻 தகுதியுள்ளவர் கூட்டத்தோடு இணைந்து ஒழுக வல்லவர்
🌻 இடத்தில் பகைவர் செயல் செயல்படுவது இல்லை.
📖 (குறள் – 0447) 📖
📖 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
📖 கெடுக்குந் தகைமை யவர்.
🌻 அறியாமையை அழுத்தமாய் அழிப்பவரை துணையாக கொண்டவரை யாரும்
🌻 கெடுக்கும் நோக்கில் அணுகமுடியாது.
📖 (குறள் – 0448) 📖
📖இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
📖 கெடுப்பா ரிலானுங் கெடும்.
🌻 அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன்
🌻 ஆட்சி அழிப்பார் இன்றியே அழியும்.
📖 (குறள் – 0449) 📖
📖 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
📖 சார்பிலார்க் கில்லை நிலை.
🌻 முதாலாகும் உழைப்பு இல்லாதவர்க்கு இல்லை ஊதியமாகும் கூலி. மதில் போல் காக்கும்
🌻 சான்றோர் இல்லாதவர்க்கு இல்லை சிறந்த நிலை.
📖 (குறள் – 0450) 📖
📖 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
📖 நல்லார் தொடர்கை விடல்.
🌻 பல நபர்கள் பகை கொள்ள பற்றுகொள்வதை விட தீமையானது நல்லவர்கள் தொடர்பை விடுவது.
🌻 எதிர்க்கவேண்டியது இல்லை எதிரிகளின் நூலை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(045 – பெரியாரைத் துணைக்கோடல்) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 அறம் அறிந்த அநுபவம் பெற்ற அறிவாளியை, தன் நோய் போக்கி அடுத்தவர் நோய் போக்க வல்லவரை நட்பு பாராட்டும் திறன் அறிந்து நட்பாக்கிக் கொள்ளவேண்டும்.
🌻 அவர்களை தவறை தண்டிக்கும் இடிப்பாரையாகவும் தகுந்தபடி பாதுகாக்கும் மதிலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
🌻 பகை வளர்க்கும் பலர் உறவை நாடுவதைவிட நல்லார் தொடர்பை கைவிடாமல் இருப்பதே நல்லது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈