👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 023 ஈகை 📖 (Ekai)
📖 (குறள் – 0221) 📖
📖 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
📖 குறியெதிர்ப்பை நீர துடைத்து.
🌻 வளமற்றவர்களுக்கு உதவுவதே உதவி.
🌻 மற்றவை எல்லாம் குறிப்பறிந்து மீண்டும் பெறும் தன்மை உடையது.
📖 (குறள் – 0222) 📖
📖 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
📖 இல்லெனினும் ஈதலே நன்று.
🌻 நல்ல நதி என்றாலும் முழ்கிவிடுதால் கெடுதலாகும்.
🌻 மேல் ஒரு உலகம்(சுவர்க்கம்) இல்லை என்றாலும் கொடுப்பதே நன்மை தரும்.
📖 (குறள் – 0223) 📖
📖 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
📖 குலனுடையான் கண்ணே யுள.
🌻 இல்லை என்ற துன்பத்தை சொல்லாத தன்மை,
🌻 கொடுக்கும் குணம் படைத்த குடும்பத்தாருக்கே உண்டு.
📖 (குறள் – 0224) 📖
📖 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
📖 இன்முகங் காணும் அளவு.
🌻 இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது,
🌻 கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும்வரை இருப்பதே அளவு.
📖 (குறள் – 0225) 📖
📖 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
📖 மாற்றுவார் ஆற்றலின் பின்.
🌻 வழிகாட்டுபவர் வழிகாட்டுவது பசிக்க வழிகாட்டுவது,
🌻 அப்பசியை மாற்றிக்கொள்வார் வழிகாட்டுதலுக்குப் பின்.
📖 (குறள் – 0226) 📖
📖அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
📖 பெற்றான் பொருள்வைப் புழி.
🌻 இல்லாதவர்களின் அழிபசி தீர்த்துவிடுதல்,
🌻 ஒருவர் தான் பெற்ற பொருளை வைப்பதற்கான இடமாகும்.
📖 (குறள் – 0227) 📖
📖 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
📖 தீப்பிணி தீண்டல் அரிது.
🌻 பார்த்து உன்ன மறுப்பவனை ( பகிர்ந்து உன்ன நினைப்பவனை)
🌻 பசி என்ற தீய நோய் தீண்டுவது கடினம்.
📖 (குறள் – 0228) 📖
📖ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
📖 வைத்திழக்கும் வன்க ணவர்.
🌻 கொடுத்து உதவும் இன்பத்தை அறியமுடியுமோ ,
🌻 தனது உடமை என்று வைத்துருந்து இழந்துவிடும் வன்மையானவர்கள்.
📖 (குறள் – 0229) 📖
📖 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
📖 தாமே தமியர் உணல்.
🌻 கேட்பதை விட கொடுமையானது ,
🌻 தேவைக்கு அதிகமாக தன்னால் பெறப்பட்டதை தானே உண்ணுவது.
📖 (குறள் – 0230) 📖
📖 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
📖 ஈதல் இயையாக் கடை.
🌻 மரணத்தை விட கொடியது இல்லை,
🌻 அதுவும் இன்பமாகும் கொடுக்க முடியாத நிலை அடைந்தால்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(023 – ஈகை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 இல்லை என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும்.
🌻 நல்ல ஆறு என்றாலும் முழ்கினால் மரணிப்போம்.
🌻 சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு.
🌻 நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள்.
🌻 ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல்.
🌻 பகிர்ந்து உண்பவருக்கு பசிக் கொடுமை வராது.
🌻 கொடுக்க முடியா சுழலைவிட மரணம் இனிமையானது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈