👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈
📖 திருக்குறள் 📖 (Thirukural)
📖 055 செங்கோண்மை 📖 (Sengonmai)
📖 (குறள் – 0541) 📖
📖 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
📖 தேர்ந்துசெய் வஃதே முறை.
🌻 உடன்படுகிறதா என்று பார்க்காமல் அருளுடன் அணுகி யாவருக்கும்
🌻 தேவையானது செய்வதே முறை.
📖 (குறள் – 0542) 📖
📖 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
📖 கோல்நோக்கி வாழுங் குடி.
🌻 வானத்தை எதிர்பார்த்தே உலகம் வாழும் அதுபோலவே ஆட்சியாளரின்
🌻 ஆணையை எதிர்பார்த்தே குடிமக்கள் வாழ்வும் இருக்கும்.
📖 (குறள் – 0543) 📖
📖 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
📖 நின்றது மன்னவன் கோல்.
🌻 முடிவை அறிந்தவர் நூல்களுக்கும் இல்வாழ்விற்கும் மூலமாய்
🌻 நிற்பது ஆட்சியாளரின் சட்டமே.
📖 (குறள் – 0544) 📖
📖 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
📖 அடிதழீஇ நிற்கும் உலகு.
🌻 குடிமக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாய் ஆணைகள் பிறப்பிக்கும் ஆட்சியாளரையே
🌻 பின்பற்றிச் செயல்படும் உலகம்.
📖 (குறள் – 0545) 📖
📖 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
📖 பெயலும் விளையுளும் தொக்கு.
🌻 இயல்புகளை அறிந்து ஆணை பிறப்பிக்கும் ஆட்சியாளர் காலத்தில்
🌻 மழையும் நல்ல செயல்களும் கூடி வரும்.
📖 (குறள் – 0546) 📖
📖 வேலன்று வென்றி தருவது மன்னவன்
📖 கோலதூஉங் கோடா தெனின்.
🌻 ராணுவ பலம் வெற்றியைத் தராது ஆட்சியாளரின்
🌻 ஆணைகள் கேடு இல்லாமல் இருப்பதே வெற்றி.
📖 (குறள் – 0547) 📖
📖 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
📖 முறைகாக்கும் முட்டாச் செயின்.
🌻 அருளுடன் காக்கப்படும் நாடுகளின் ஆட்சியாளர்களை
🌻 ஆட்சி முறையே காக்கும் தவறுகள் செய்தாலும்.
📖 (குறள் – 0548) 📖
📖 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
📖 தண்பதத்தான் தானே கெடும்.
🌻 மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாமலும், தேவையானவற்றை செய்யாமலும் இருக்கும் ஆட்சியாளர்கள்
🌻 தனக்கு தானே கேடு செய்துகொள்வார்கள்.
📖 (குறள் – 0549) 📖
📖 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
📖 வடுவன்று வேந்தன் தொழில்.
🌻 குடிமக்களையும், ஆட்சி எல்லைகளை கடந்தும் பாதுகாப்பு அளித்து குற்றங்களை கலைப்பது
🌻 ஆட்சியாளர்களின் அடையாளம் அல்ல. அவசியம் செய்யவேண்டிய தொழில்.
📖 (குறள் – 0550) 📖
📖 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
📖 களைகட் டதனொடு நேர்.
🌻 கொலை செய்வதில் கொடுமையானவரை வேண்டாம் என அழித்தல், பசுமையான பயன்பாட்டு நிலத்தில்
🌻 தேவையற்றதை பிடுங்கி கட்டியதற்கு சமம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
(055 – செங்கோண்மை) – அதிகார விளக்கம் – (குரு சிவயோகி)
🌻 உடன்படுகிறதா என்று பாராமல் இயற்கையை புரிந்துக் கொண்டு யாவரும் சிறக்க வழிமுறை செய்வதே நல்லாட்சிமுறை இப்படி செய்பவர் வான்நோக்கிய வளத்தை தன் குடிமக்களுக்கு வழுங்குவார்.
🌻 ஆட்சியாளர்களின் சட்டமே இறுதியாக இருப்பதால் ராணுவ பலத்தை விட நற்குணமே பலமாக அமையும்.
🌻 கொடியவர்களை அழித்தல் களை எடுப்பதைப் போன்றது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : May 2025
Next Post
மற்ற அதிகாரங்களை பார்வையிட கீழே உள்ள போஸ்ட்க்கு செல்லவும்,
👉 திருக்குறள் யோக விளக்கவுரை – (குரு சிவயோகி) 👈